பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:திருநாவுக்கரசு நாயனார் புராணம் 285

பிணத்தை ஒரு மறைவாகிய இடத்தில் அந்த அப்பூதியடிகள் நாயனார் ஒளித்து வைத்து விட்டார். பாடல் வருமாறு:

"தீயவிடம் தலைக்கொள்ளத் -

தெருமந்து செழுங்குருத்தைத் தாயர்கரத் திணில்கீட்டித் - தளர்ந்துதனைத் தழல்நாகம் மேயபடி உரைசெய்யான் 3

விழக்கண்டு, கெட்டொழிந்தோம்: தூயவர் இங் கமுதுசெயத்

தொடங்கார்."என் றது.ஒளித்தார்.” திய-அந்த நாகப்பாம்புதன்னைக்கடித்ததனால் கெட்ட். ‘விடம்-நஞ்சு. தலைக் கொள்ள-தன்னுடைய தலையின் ഥേഖ ஏறிக் கொள்ள, த்:சந்தி. தெரு மந்து-தன்னுடைய திருவுள் ளத்தில் சுழற்சியை அடைந்து.செழும்.செழுமையாக உள்ள. குருத்தை வாழைக் குருத்திலையை. த்:சந்தி, தாயர்-தன்னு. டைய அன்னையாருடைய கரத்தினில்-கையில். நீட்டிகொடுத்து விட்டுத்:சந்தி. தளர்ந்து-தளர்ச்சியை அடைந்து. தனை-தன்னை: இடைக்குறை. த்:சந்தி, தழல்-நெருப்பைப் போன்ற நஞ்சைக் சக்கும். நாகம்-நாகப்பாம்பு, மேயபடிதன்னைக் கடித்து உண்டாகிய விதத்தை. உரை செய்யான்கூறாதவ னாகி; முற்றெச்சம். விழ-இறந்து பிணமாகத் தரையில் விழ. க்சந்தி. கண்டு-அதைப் பார்த்து. கெட் 'டொழிந்தோம்-நாங்கள் கெட்டு ஒழிந்து விட்டோம்.

தூயவர்-பரிசுத்தராகிய திருநாவுக்கரசு நாயனார். இங்குஇந்த நம்முடைய திருமாளிகையில். அமுதுசெய-திருவமுது செய்தருள. செய:இடைக்குறை. த்:சந்தி, தொடங்கார்ஆரம்பிக்க மாட்டார். என்று-என எண்ணி. அது-அந்தத் திருநாவுக்கரசு என்னும் தங்களுடைய புதல்வனாகிய சிறு * வனுடைய பிணத்தை, ஒளித்தார்-ஒரு மறைவாகிய இடத் தில் அந்த அப்பூதியடிகன் நாயனார் ஒளித்து வைத்த விட்டார். - . . . . . . . . . . . . . to: