பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 பெரிய புராண விளக்கம்-.ே

பிறகு உள்ள 207-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

அந்த அப்பூதியடிகள் நாயனாரும் அவருடைய பத்தினி யாரும் தம்முடைய மூத்த புதல்வனாகிய திருநாவுக்கரசினு டைய பிணத்தை ஒளித்து வைத்து விட்டுச் சிறிதேனும் தங்களுடைய திருவுள்ளங்களில் தடுமாற்றம் இல்லாதவர் கனாகி அடியேங்களுடைய தலைவனே, தேவரீர் திருவமுது செய்தருள வேண்டும்' என்று அந்தத் திருநாவுக்கரசு நாய அாரிடம் வந்து அவரை வணங்க தேவர்களினுடைய தலைவ னாகிய விரட்டானேசுவரனுடைய திருத்தொண்டராகிய அந்தத் திருநாவுக்கரசு நாயனார் தம்முடைய திருவுள்ளத் தில் தடுமாற்றத்தை நமபராகிய வீரட்டானே சுவரர் வழங்கிய திருவருளினால் தெரிந்து கொண்டருளி அந்தத் துன்பத்தைப் போக்குவாரானார். பாடல் வருமாறு:

"" தம்புதல்வன் சவம்மறைத்துத்

தடுமாற்றம் இலராகி * எம்பெருமான், அமுதுசெய

வேண்டும் என வந்திறைஞ்ச உம்பர்பிரான் திருத்தொண்டர் உள்ளத்தில் தடுமாற்றம் - நம்பர்திரு வருளாலே

அறிந்தருளி வைதீர்ப்பார்.” r தம்-அந்த அப்பூதியடிகள் நாயனாரும் அவருடைய தர்ம பத்தினியாரும் தங்களுடைய. புதல்வன்-தம்முடைய மூத்த புதல்வனாகிய திருநாவுக்கரசினுடைய. s சவம்பிணத்தை மறைத்து-ஒரு மறைவாகிய இடத்தில் ஒளித்து வைத்து விட்டு. த்:சந்தி. தடுமாற்றம்-தங்களுடைய திருவுள் ளங்களில் சிறிதேனும் தடுமாற்றம். இலராகி-இல்லாதவர்க ளாகி, ஒருமை பன்மை மயக்கம்: இடைக்குறை. எம்-அடி யேங்களுடைய. இது அப்பூதியடிகளும் அவருடைய பத்தின் யாரும் தங்களைச் சேர்த்துக் கூறியது. பெருமான்-தலை வரே; ஒருமை பன்மை மயக்கம், விளி. அமுது செய.வேண்