பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 287.

டும்-தேவரீர் திருவமுது செய்தருள வேண்டும்.செய: இடைக் குறை. என- என்று கூறி, இடைக்குறை. வந்து-அந்தத் திரு நாவுக்கரசு நாயனாரிடத்துக்கு வந்து. இறைஞ்ச-அவரை வணங்க. உம்பர்.தேவர்களினுடைய, ஒருமை, பன்மை மயக் கம். பிரான்-தலைவனாகிய வீரட்டானேசுவரனுடைய.. திருத் தொண்டர்-திருத் தொண்டராகிய அந்தத் திருநாவுக் கரசு நாயனார். உள்ளத்தில்-தம்முடைய திருவுள்ளத்தில். தடுமாற்றம்-தடுமாற்றத்தை. நம்பர்-தம்முடைய அடியவர் களுக்குப் பல வகையான நம்பிக்கைகளை உண்டாக்குபவ. ராகிய வீரட்டானேசுவரர். அந்த நம்பிக்கைகள் இன்ன என்பதை வேறு ஒரிடத்தில் கூறினோம்; ஆண்டுக் கண்டு அணர்க. திருவருளால்-வழங்கிய திருவருளினால், ஏ:அசை நிலை. அறிந்தருளி-தெரிந்து கொண்டருளி, நவை-அந்தத் திருநாவுக்கரசு என்னும் சிறுவன் இறந்து பிணமாகி விட்ட துன்பத்தை, தீர்ப்பார்-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் போக்கியருள்பவரானார்.

பிறகு வரும் 208-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: "அன்றைக்கு அந்த அப்பூதியடிகள் நாயனாரும் அவரு. டைய தர்மபத்தினியாரும்தங்களுடைய மூத்தபுதல்வனாகிய திருநாவுக்கரசினுடைய பிணத்தை ஒரு மறைவான இடத் தில் ஒளித்து வைத்து விட்டதற்கு அளவைக் கடந்த கருணை யைப் பெற்றவராகி அந்தப் பிணத்தைக் கொன்றை மலர் மாலையை அணிந்த நறுமணம் கமழும் சடாபாரத்தைத் தம்முடைய தலையின்மேற் பெற்றவராகிய விரட்டானே சுவரர் எழுந்தருளியிருக்கும் ஆலயத்துக்கு முன்னால் கொண்டு வரச் செய்து, 'ஒன்று கொலாம்' என்று ஒரு. திருப்பதிகத்தைத் தொடங்கித் தம்மை அடிமையாக உடை - யவனாகிய விரட்டானேசுவரனுடைய சீர்த்தியை அந்தத்

திருநாவுக்கரசு நாயனார் பாடியருள அதற்குப் பிறகுதன்னை தாகப்பாம்பு கடித்ததனால் தன்னுடைய தலைக்கு மேல். ஏறிய விடம் சென்று அகன்று அந்தச் சிறுவன் தன்னுடைய