பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 38%.

உணர்ந்து-விழித்துக் கொண்டு. எழுந்து-தரையிலிருந்து எழுந்து. இருந்தான்-அமர்ந்தான். -

பிறகு உள்ள 209-ஆம் பாடலின் கருத்து வருமாறு: , "தங்களுடைய அருமையாக இருக்கும் புதல்வனாகிய, திருநாவுக்கரசு மீண்டும் தன்னுடைய உயிரைப் பெற்ற அந்தச் செயலைப் பார்த்த பிறகும் அந்தத் திருநாவுக்கரசு நாயனார் திருவமுது செய்தருளாமல் இருந்ததற்காகத் தளர்ச்சியை அடைந்து துன்பத்தால் வருந்தியவர்களாகிய அந்த அப்பூதியடிகள் நாயனாரும், அவருடைய தரும பத்தி னியாரும் தாங்கள் அடைந்த துயரத்திலிருந்து விலகும் பொருட்டு திருக்கோயிலிலிருந்து வருத்தத்தை அடையும் அந்த அப்பூதியடிகள் நாயனாருடைய திருமாளிகைக்குள் நுழைந்து அழகிய வாகீச முனிவராகிய திருநாவுக்கரசு நாயனார் அந்த அப்பூதியடிகள் நாயனார் படைத்த விருந் துணவைத் திருவமுது செய்தருளி விருப்பத்தோடு அந்தத் திங்களூரில் அந்த நாயனார் தங்கிக் கொண்டிருக்கும் காலத் தில். பாடல் வருமாறு: -

- அருந்தனயன் உயிர் பெற்ற

அதுகண்டும் அமுதுசெயா திருந்த தற்குத் தளர்வெய்தி இடருழந்தார் துயர்நீங்க வருந்தும் அவர் மனைப்புகுந்து

வாகீசத் திருமுனிவர் விருந்தமுது செய் தருளி

விருப்பினுடன் மேவும்நாள். ' இந்தப் பாடல் குளகம். அரும்-தங்களுடைய பெறுதற்கு அரியவனாக விளங்கும். தனயன்-புதல்வனாகிய திருநாவுக் கரசு. உயிர்பெற்ற-இழந்த உயிரை மீண்டும் பெற்ற. அது. அந்தச் செயலை. கண்டும்-பார்த்த பிறகும். அமுது செயாது-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் திருவமுது செய்

தி-25