பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 . பெரிய புராண விளக்கம்-6

தருளாமல். செயாது: இடைக்குறை. இருந்ததற்கு-இருந்த தற்காக. த்:சந்தி. தளர்வு-தளர்ச்சியை, எய்தி-அடைந்து. இடர்-துன்பத்தால். உழந்தார்-வருந்தியவர்களாகிய அந்த அப்பூதியடிகள் நாயனாரும் அவருடைய தரும பத்தினி யாரும்; ஒருமை பன்மை மயக்கம். துயர்-அடைந்த துயரத்தி லிருந்து. நீங்க-விலகும் பொருட்டு, வருந்தும்-வருத்தத்தை அடையும். அவர்-அந்த அப்பூதி நாயனாருடைய. மனைவிரட்டானேசுவரருடைய திருக்கோயிலிலிருந்து திருமாளி கைக்குள். ப்:சந்தி. புகுந்து-நுழைந்து. வாகீசத்திரு முனி வர்-அழகிய வாகீச முனிவராகிய திருநாவுக்கரசு நாயனார். விருந்து-அந்த அப்பூதியடிகள் நாயனாருடைய தருமபத்தினி யார் படைத்த விருந்துணவை ஆகுபெயர். அமுது செய் தருளி-திருவமுது செய்தருளி. விருப்பினுடன்-விருப்பத் தோடு, மேவும்-அந்தத் திங்களுரில். மேவும்-திருநாவுக்கரசு நாயனார் விரும்பித் தங்கிக் கொண்டிருக்கும். நாள்காலத்தில். -

அடுத்து உள்ள 210-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அந்தத் திங்களுரிலிருந்தும் அழகிய வேதியராகிய அப்பூதி வடிகள் நாயனார் தமக்குப் பின்னால் வர ஆந்தத் திருநாவுக் கரசு நாயனார் பசுமையாகிய கண்களைப் பெற்ற இடபவாக னத்தின் ஒப்பற்ற பாகராகிய ஆபத்சகாயேசுவரர் திருக் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் அழகிய திருப்பழனம் என்னும் சிவத்தலத்துக்குள் அந்த நாயனார் நுழைந்து தம்முடைய திருவுள்ளத் தில் தங்கியிருக்கும் பெருகி எழும் விருப்பத்தோடும் தம்முடைய தலைவனாகிய அந்த ஆபத் சகாயேசுவரருடைய வெற்றிக் கழலைப் பூண்டு விளங்கும் திருவடிகளைச் சேர்ந்து தம்முடைய திருவுள்ளத்தில் பொங்கி எழுந்த பக்தி உண்டாக அ ந்த ஆபத்சகாயேசுவரரைப் பணிந்து விட்டு அவருடைய சந்நிதியில் நின்று கொண்டு வாழ்த்துக்களை அந்த நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்பவரானார். பாடல் வருமாறு: .