பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 391

திங்களுர் தனில்கின்றும்

திருமறையோர் பின்செல்லப் பைங்கண்விடைத் தனிப்பாகர்

திருப்பழனப் பதிபுகுந்து தங்குபெருங் காதலொடும்

தம்பெருமான் கழல்சார்ந்து பொங்கியஅன் புறவணங்கி

முன்நின்று போற்றிசைப்பார். திங்களுர்தனில் நின்றும்-அந்தத் திங்களூரிலிருந்தும். தன்:அசைநிலை. திரு-அழகிய மறையோர்-வேதியராகிய அப்பூதியடிகள் நாயனார். பின்-தமக்குப் பின்னால். செல்லவர. ப்:சந்தி. பைம்-பசுமையாக விளங்கும். கண்-கண் களைப் பெற்ற; ஒருமை பன்மை மயக்கம். விடை-இடபவாக னத்தை. தனிப்பாகர்-ஒப்பற்ற ஒட்டுபவராகிய ஆபத்சகா யேசுவரர் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும். திரு-அழகிய: செல்வர்கள் வாழும் எனலும் ஆம்; திணை மயக்கம். ப்:சந்தி, பதி-சிவத்தலத்துக்குள். புகுந்து-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் நுழைந்து. தங்கு-தம்முடைய திருவுள்ளத்தில் தங்கியிருக்கும். பெரும்-பெருகி எழும். காதலொடும்-விருப்பத்தோடும். தம்-தம்முடைய. பெரு மான்-தலைவனாகிய அ ந் த ஆபத்சகாயேசுவரருடைய. கழல்-வெற்றிக் கழலைப் பூண்டு விளங்கும் திருவடிகளை: ஆகுபெயர். சார்ந்து-சேர்ந்து. பொங்கிய-தம்முடைய திருவுள்ளத்தில் .ெ பாங் கி எ மு ந் த. அ ன் பு- ப க் தி. உற-உண்டாக, வணங்கி-அந்த ஆபத்சகாயேசுவரரைப் பணிந்து விட்டு. முன்-அவருடைய சந்நிதியில். நின்று-நின்து கொண்டு. போற்று-வாழ்த்துக்களை; ஒருமை பன்மை மயக்கம். இசைப்பார்-அந்த நாயனார் திருவாய் மலர்த்தரு னிச் செய்பவரானார். . .

勘亨