பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பெரியபுராண விளக்கம்-6

ளோடு சமானமாக உள்ள. குல-ஒருகுடும்பத்தினுடைய.முதல் -முதல்வராகிய, திணை மயக்கம். வேளாண்-வேளாளர்களா கிய, ஒருமை பன்மை மயக்கம்; திணை மயக்கம். குடி-குடிமக்க ளுடைய, ஒருமை பன்மை மயக்கம், த்:சந்தி. தலைவர்தலைவராக விளங்குபவர், மின்-மின்னலைப் போல ஆர்நிறைந்த ஒளியை வீசும். செம்-சிவப்பாக விளங்கும். சடைசடாபாரத்தைத் தம்முடைய தலையின் மேற் கொண்ட அண்ணல் - பெருமையைப் பெற்றவராகிய திருவதிக.ை வீரட்டானேசுவரருடைய. மெய்-உண்மையான. அடிமை. -அடிமையாக இருப்பதில் ஆகுபெயர். விருப்பு-விருப்பத்தை, உடையார் - பெற்றவர். பொன்-தங்கத்தால். ஆரும். அமைந்ததும்; வினையாலணையும் பெயர். மணி-மாணிக் கங்களைப் பதித்ததுமாகிய, ஒருமை பன்மை மயக்கம் வினையாலணையும் பெயர். மெளலி-மகுடத்தைச் சூடிய. ப்:சந்தி. புரவலன்பால்-அரசனிடத்தில். அருள்-திருவருளை. உடையார்-உடையவர்.

பிறகு உள்ள 23-ஆம் பாடலின் கருத்து வருமாறு: வீரர்களினுடைய தகுதியாகிய பான்மையைப் பெற்ற வீரமாகிய வேலைகளில் வலிமையைப் பெற்ற ஆண் சிங்கத் தைம் போல இருக்கிறவர்; யாவரும் கானும் தகுதியைப் பெற்ற பெருமையைக் கொண்ட அழகோடு விளங்கும் கலிப் பகையார் என்னும் திருநாமத்தை உடையவர்; தாம் அணி கலனைப் போலக் கொண்ட கொடுப்பதில் வல்லவராகிய புகழனாராகிய மருணிக்கியாருடைய - தந்தையாரிடத் தில்: ஒப்பு இல்லாத அவருடைய புதல்வியாகிய திலகவதியைத் திருமணத்துக்கு உரிய கன்னிகையாகப் பெற விரும்பி தம்முடைய திருவுள்ளத்தில் போங்கி எழும் விருப்பத்தால் மேன்மையாகிய நற்பண்புகளைப் பெற்ற சான்றோர்களைப் புகழனார் இருமாளிகைக்குப் போகுமாறு அனுப்பினார். பாடல் வருமாறு: