பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 41

சுருணிக்கி மலர்விக்கும்

கலைபயிலத் தொடங்குவித்தார். ’

மருணிக்கியார்-அந்த மருணிக்கியாருடைய சென்னி. தலையில் உள்ள. மயிர்-மயிர்களை; ஒருமை பன்மை மயக்கம். நீக்கும்-அகற்றும். மண - குடுமி வைத்தலாகிய திருமண வினையும்-சடங்கையும். தெருள்-தெளிந்த அறி வைப் பெற்ற; ஆகு பெயர். நீர்-இயல்பைக் கொண்ட. ப்:சந்தி.பன்-பல,மாந்தர்-திருவாய்மூரில் வாழும் மனிதர்கள் ஒருமை பன்மை மயக்கம். எலாம்-எல்லாரும். மகிழ்மகிழ்ச்சியில். சிறப்ப-சிறந்து விளங்கவும். ச்:சந்தி. செய்த தற்பின்-அந்தச் சடங்கைப் புரிந்ததற்குப் பிறகு, பொருள்செல்வத்தை. நீத்தம்-வெள்ளத்தைப்போல். கொள-அந்த மக்கள் பெற்றுக் கொள்ளுமாறு; இடைக்குறை. வீசி-வழங்கி. ப்:சந்தி, புலன்-மெய், வாய், கண்கள், மூக்கு, காதுகள் என்னும் ஐந்து இந்திரியங்களும்; ஒருமை பன்மை மயக்கம். கொளுவ-பெறுபவையாகிய, இடைக்குறை. மனம்-தம்மு டைய திருவுள்ளத்தில். முகிழ்த்த-அரும்பிய தோன்றிய. சுருள்-சுருளாகிய அறியாமையை. நீக்கி-போக்கிவிட்டு. மலர் விக்கும்-மலர்ச்சியைப் பெறுமாறு: செய்விக்கும். கலைஅறுபத்துநான்கு கலைகளையும்; ஒருமை பன்மை மயக்கம். பயில-கற்றுப் பழகும் வண்ணம். த்:சந்தி. . தொடங்கு வித்தார்-அந்தப் புகழனாரும் மாதினியாரும் ஆரம்பித்து வைத்தார்கள்; ஒருமை பன்மை மயக்கம். . .

பிறகு வரும் 21-ம் ஆம் பாடலின் கருத்து வருமாறு:

தம்முடைய தந்தையாராகிய புகழனார்களிப்பிலும் மகிழ்ச்சியிலும் தலை சிறந்து நிற்கும் வண்ணம் முறைமை யோடு தம்முடைய திருவுள்ளத்தில் மலர்ச்சியை அடைந்து பொங்கி எழும் அறிவாற்றலால் செழுமையாகிய அறுபத்து நான்கு கலைகளினுடைய வகைகள் எல்லாவற்றையும் அந்த

இனம் பருவத்திலேயே முறையோடு கற்றுத் தேர்ச்சி பெற்று