பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

尋認 - பெரிய புராண விளக்கம்-6 *

முதிர்ச்சியை அடைய அவற்றில் ஆழ்ந்த அறிவு உண்டாகும் விதத்தில் அந்தப் புகழனார் புதல்வராகிய மருணிக்கியார் கறை நீங்கிய இளைய பிறைச் சந்திரனைப் போல வளர்ந்து வரலானார்.' பாடல் வருமாறு:

தந்தையார் களிமகிழ்ச்சி

x தலைசிறக்க முறைமையினால்

சிந்தைமலர்ந் தெழும்.உணர்வில்

செழுங்கலையின் தி றங்கள் எல்லாம்' முந்தைமுறை மையிற்பயின்று

முதிரஅறி வெதிரும்வகை மைந்தனார் மறுஒழிந்த

இளம்பிறைபோல் வளர்கின்றார். ” தந்தையார்-தம்முடைய தகப்பனாராகிய புகழனார். களி-களிப்பிலும். மகிழ்ச்சி-மகிழ்ச்சியிலும். தலைசிறக்கதலைசிறந்து நிற்குமாறு. முறைமையினால்-முறையோடு; உருபு மயக்கம். சிந்தை-தம்முடைய திருவுள்ளம். மலர்ந்துமலர்ச்சியை அடைந்து. எழும்-பொங்கி எழும். உணர்வில்அறிவாற்றலினால், உருபு மயக்கம். செழும்-செழிப்பாக விளங்கும். கலையின்-அறுபத்து நான்கு கலைகளினுடைய, ஒருமை பன்மை மயக்கம். திறங்கள்-வகைகள், எல்லாம். எல்லாவற்றையும். முந்தை-அந்த இளம்பருவத்திலேயே, முறைமையில்-முறையோடு; உருபு மயக்கம். பயின்று-கற்றுப் பழகி. முதிர அறிவு-அந்தக்கலைகளில் தம்முடைய அறிவு முதிர்ச்சியை அடைய எதிரும் வகை-அவற்றில் ஆழ்ந்த புலமை உண்டாகும் விதத்தில். மைந்தனார்-அந்தப் புகழ னாருடைய புதல்வராகிய மருணிக்கியார். மறு-முயலாகிய கன்ற ஒழிந்த-நீங்கிய இளம் பிறைபோல்-இளமையோடு விளங்கும் பிறைச் சந்திரனைப் போல. வளர்கின்றார்

வளர்ந்து வருகிறவரானார். ' : .