பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462 பெரிய புராண விளக்கம்-8

.தால் செய்த மாணிக்கத்தைப் பதித்த மாங்கல்ய நூலாகிய தாலியைத் தாங்காமல் எல்லா உயிர்களுக்கும் திருவருளைத் தாங்கிக்கொண்டு இந்த உலகத்தில் தம்முடைய திருமாளி கையில் தங்கிக்கொண்டு தவத்தைப் புரிந்தருளி அந்தத் திலகவதியார் வாழ்ந்து கொண்டிருந்தார்." பாடில்

வருமாறு: -

தம்பியார் உளராக

வேண்டும்’ என வைத்ததயா உம்பருல கணையவுறு

நிலைவிலக்க உயிர்தாங்கி அம்பொன்மணி நூல்தாங்கா

தனைத்துயிர்க்கும் அருள் தாங்கி இம்பர்மனைத் தவம்புரிந்து

திலகவதி யார்இருந்தார். ” தம்பியார்-அந்தத் திலகவதியார் தம்முடைய தம்பியா ராகிய மருணிக்கியார். உளராக-உயிரோடு இருப்பவராக; இடைக்குறை. வேண்டும் என-வேண்டும் என்று. என: இடைக்குறை, வைத்த-அந்த மருணிக்கியாரிடத்தில் தாம் வைத்திருந்த தயா-தயை. உம்பர்-தேவர்கள் வாழும்; ஒருமை பன்மை மயக்கம். உலகு-தேவலோகத்தை. அணையஅடைவதற்காக உறு-எண்ணியிருந்த நிலை-நிலையை. விலக்க-விலக்கும் பொருட்டு, உயிர்-தம்முடைய் உயிரை. தாங்கி-போக்கிவிடாமல் தாங்கிக்கொண்டு. அம்-அழகிய. பொன்-தங்கத்தால் செய்த. மணி-மாணிக்கத்தைப் பதித்த. நூல்-மாங்கல்ய நூலாகிய தாலியை. தாங்காது-திருமணம் புரிந்துகொண்டு தாங்காமல். அனைத்து - எல்லாவகை யாகிய, உயிர்க்கும்-உயிர்களிடத்திலும், ஒரும்ை பன்மை மயக்கம்; உருபு மயக்கம், அருள்-திருவருளை. தரங்கி-தாங் கிக்கொண்டு. இம்பர்-இந்த உலகத்தில். மனை-தம்முடைய திருமாளிகையில் தங்கிக்கொண்டிருந்து. த்:சந்தி. தவம்