பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் : 61

பின்னையும்கான் உமைவணங்கப்

பெறுதலினால் உயிர்தரித்தேன்; என்னை இனித் தணிக்கைவிட் - டேகுவீர் எனில்யானும்

முன்னம்.உயிர் நீப்பன்' என

மொழிந்திடரின் அழுந்தினார்.’’ அந்நிலையில்-அந்த நிலையில், மிக-மருணிக்கியார் மிகுதியாக. ப்:சந்தி. புலம்பி அழுது. அன்னையும்-அடி யேனுடைய தாயாகிய மாதினியாரும். அத்தனும்-அடியே னுடைய தகப்பனாகிய புகழனாரும், அகன்ற-இந்த மண்ணு லகத்தை விட்டுப் பிரிந்ததற்கு. பின்னையும்-பிறகும். நான்

அடியேன். உமை-அடியேனுடைய தமக்கையாராகிய தங்களை; இடைக்குறை. வணங்க-பணிவதற்கு உரிய, ப்:சந்தி. பெறுதலினால்-பாக்கியத்தை அடைவதனால்.

உயிர்-அடியேனுடைய உயிரை. தரித்தேன்-போக்கிவிடாமல் தாங்கிக் கொண்டிரு தேன். என்னை-அடியேனை. இனிஇனிமேல். த்:சந்தி. தனி-தனியாக, க்:சந்தி. கைவிட்டு-கை நழுவவிட்டு. விட்டு ஏகுவீர்-போவீர்கள். எனில்-என்றால், இடை க்குறை. யானும்-அடியேனும்.முன்னம்-தங்களுக்குமுன் னால், உயிர்-அடியேனுடைய உயிரை. நீப்பன்-விட்டுவிடு வேன். என-என்று; இடைக்குறை. மொழிந்து-திருவாய் மலர்ந்தருளிச் செய்துவிட்டு. இடரின்-துக்க சாகரத்தில். அழுந்தினார்-மருணிக்கியார் ஆழ்ந்தார். -

பின்பு வரும் 34-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: * அந்தத் திலகவதியார் தம்முடைய தம்பியாராகிய மருணிக்கியார் உயிரோடு இருப்பவராக வேண்டும்' என்று அவரிடத்தில் வைத்திருந்த தயை அந்த மருணிக்கியார் தேவர்கள் வாழும் தேவ லோகத்தை அடைவதற்காக எண்ணிய நிலையை விலக்கும் பொருட்டுத் தம்முடைய உயிரைப் போக்கிவிடாமல் தாங்கிக்கொண்டு அழகிய தங்கத்