பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பெரிய புராண விளக்கம்-6

டைய புகழ். விளங்க.விளங்கும் வண்ணம். நிதி-செல் வத்தை. அளித்தும் - இரவலர்களுக்கு வழங்கியருளியும். கருணையினால்-தம்மிடம் உண்டாகிய கருணையால். ஆசுஒரு குற்றமும். இல்-இல்லாத; கடைக்குறை. அறச்சாலை களும் - தருமச்சாலைகளையும். தண்ணிர்ப் பந்தரும்தண்ணீர்ப் பந்தல்களையும்; ஒருமை பன்மை மயக்கம். அமைப்பார்-கட்டி வைப்பவரானார். - -

பிறகு உள்ள 36-ஆம் பாடலின் கருத்து வருமாறு: ‘பூம்பொழில்களில் பலவகையாகிய மரங்களை நட்டு வைத்து வளருமாறு புரிந்தருளியும், பல குளங்களைத் தோண்டியருளியும், தம்முடைய கடன் ஒரு சிறிதும் தவறா மல் வருகிற மக்களுக்கு வேண்டிய பொருள்களை மகிழ்ச்சியை அடைந்து வழங்கியருளியும், தம்முடைய திரு மாளிகைக்கு வரும் அதிதிகளுக்கு இனிய சுவைகளைப் பெற்ற விருந்து உணவுகளை வழங்கியருளியும், நாவன்மையைப் பெற்ற புலவர்களுக்குச் செல்வத்தைப் பெருகலாக அளித்தருளியும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நான்கு நிலங்க ளில் உள்ள ஊர்களில் வாழும் மக்கள் எல்லோர்க்கும் என்றைக்கும் நீங்காத கொடையாகிய செயல் துறையில் அந்த மருணிக்கியார் நிலைத்து நின்றார். பாடல் வருமாறு:

  • காவளர்த்தும் குளம்தொட்டும்

கட்ப்பாடு வழுவாமல் மேவினர்க்கு வேண்டுவன

மகிழ்ந்தளித்தும் விருந்தளித்தும் நாவலர்க்கு வளம்பெருக ...,

கல்கியும்கா னிலத்துள்ளோர் யாவருக்கும் தவிராத -

ஈகைவினைத் துறைகின்றார்.' கா-பூம்பொழில்களில்: ஒருமை பன்மை மயக்கம். வளர்த் தும் பல வகையாகிய மரங்களை தட்டு வைத்து அவை வளரு