பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 65

மாறு புரிந்தருளியும், அந்த மரங்களாவன: தேக்கு மரம் வாகை மரம், வேங்கை மரம், தென்னை மரம், பன மரம்' விளா மரம், மா மரம், பலா மரம், பல வகையாகிய - வாழை மரங்கள், வில்வ மரம், மகிழ மரம், தமால மரம், நுணா மரம், ஆல மரம், அரச மரம், நாரத்தை மரம், கொளிஞ்சி மரம், பவளமல்லிகை மரம், நெட்டிலிங்க மரம், அசோக மரம், வேப்ப மரம், புளிய மரம், குருக்கத்தி மரம் முதலியவை. குளம்-பல குளங்களை ஒருமை பன்மை மயக்கம். தொட்டும்.தோண்டியருளியும். கடப்பாடு-தம்முடைய கடமை. வழுவாமல் சிறிதளவும் பிழையாத வண்ணம். மேவினர்க்கு-தம்முடைய திருமாளிகைக்கு வந்த மக்களுக்கு ஒருமை பன்மை மயக்கம். வேண்டுவன-வேண்டிய பொருள்களை, அவையாவன: வேட்டிகள், அங்க வஸ்திரங்கள், செல்வம், உணவுப் பொருள்கள், செருப்பு, குடை' சீலைகள், ரவிக்கைகள், பலவகை அணிகலன்கள் முதலியவை. மகிழ்ந்து-மகிழ்ச்சியை அடைந்து. அளித்தும்-கொடுத்தருளியும். விருந்து-தம்முடைய திரு மாளிகைக்கு வரும் அதிதிகளுக்கு இனிய ஆறு சுவைகளைப் பெற்ற விருந்து உணவு களை ஒருமை பன்மை மயக்கம். அவையாவன: சம்பா அரிசிச்சோறு, பலவகைக் கறியமுதுகள், நெகிழ்கறியமுதுகள். பால்பாயசம், ரசம், தயிர் வடைகள், இலட்டுகங்கள், ஊறுகாய்கள் முதலியவை. ஆறுசுவைகளாவன: காரம், கசப்பு, தித்திப்பு, துவர்ப்பு. உப்பு, புளிச்சுவை என்பவை. அளித்தும் -நல்கியருளியும். நாவலர்க்கு-நாவன்மையைப் பெற்றவர்களாகிய புலவர்களுக்கு: ஒருமை பன்மை மயக்கம். வளம்-செல்வத்தை. பெருக-பெருகலாக.நல்கியும்-வழங்கியருளியும். நானிலத்து உள்ளோர்-குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நான்கு நிலங்களில் உள்ள ஊர்களில் வாழும் மக்கள். யாவருக்கும்-எல்லோருக்கும். தவிராத-என்றைக்கும் நீங்காத. ஈகை-கொடையாகிய, வினை-செயல். த்:சந்தி.