பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 . பெரிய புராண விளக்கம்- இ.

துறை-துறையில், நின்றார்-அந்த மருணிக்கியார் நிலைத்து, நின்றார். - -

பிறகு வரும் 37-ஆம் பாடலின் கருத்து வருமாறு: நிலைத்து நிற்காத இந்த மண்ணுலகத்தினுன் டய இயல் பைப் பார்த்து, 'நிலைத்து நில்லாத வாழ்க்கையில் அடி யேன் வாழ்கிறவன் அல்லேன்' என்று எண்ணிச் சைவ சம: யத்தை அறவே விட்டுவிட்டு சமயங்களாக உள்ளவற்றுள் நல்ல சமய வழியை அறிந்து உணர்ந்து கொள்ள நம்பராகிய சிவபெருமானார் தம்முடைய திருவருளை வழங்காமையால் கொல்லாமை என்னும் போர்வைக்குள் மறைந்து கொண்டு: வாழும் சமணர்களுடைய ஜைன சமயத்தைச் சேர்பவரா னார் அந்த மருணிக்கியார் பாடல் வருமாறு:

' நில்லாத உலகியல்பு

கண்டு, நிலை யாவாழ்க்கை அல்லேன். என் றறத்துறந்து

சமயங்க ளானவற்றின் நல்லாறு தெரிந்துணர

கம்பர்.அரு ளாமையினால் கொல்லாமை மறைந்துறையும்

அமண்சமயம் குறுகுவார்.' நில்லாத-நிலைத்து நிற்காத, உலகு-இந்த மண்ணுலகத் தினுடைய. இயல்பு-தன்மையை. கண்டு-பார்த்து. நிலையாநிலைத்து நில்லாது. வாழ்க்கை-வாழ்க்கையில். அல்லேன். அடியேன் வாழ்கிறவன் அல்லேன். என்று என்று எண்ணி. அற-சைவசமயத்தை அடியோடு. த்:சந்தி. துறந்து-விட்டு. விட்டு. சமயங்கள். ஆனவற்றின்-சமயங்களாக உள்ளவற்றுள். நல்-நல்ல. ஆறு-வழியாகிய சைவசமய வழியை. தெரிந்து அறிந்து, உணர-உணர்ந்து கொள்ள. நம்பர்-தம்முடைய அடியவர்களுக்குப் பலவிதமாகிய நம்பிக்கைகளை உண்டாக்கு. - பவராகிய சிவபெருமானார். அந்த நம்பிக்கைகள் இன்னவை.