பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 67."

என்பதை வேறு ஒரிடத்தில் கூறினோம்; ஆண்டுக் கண்டு. ணர்க. அருளாமையினால்-தம்முடைய திருவருளை வழங் காமையால். கொல்லாமை.கொல்லாமை என்னும் போர் வைக்குள்; ஆகுபெயர். மறைந்து-தங்களை மறைத்துக்கொண்டு. உறையும்-வாழும். அமண்-சமணர்களினுடைய: திணைமயக்கம். சமயம்-ஜைனசமயத்தை. குறுகுவார்.அந்த மருணிக்கியார் சேர்பவர் ஆனார். -

பிறகு வரும் 38-ஆம் பாடலின் கருத்து வருமாறு: "அந்த மருணிக்கியார் பாடலிபுத்திரமாகிய திருப்பாதிரிப் புலியூர் என்னும் சிவத்தலத்தை அடைந்து சமணத் துறவி. கள் வாழும் ஒரு பள்ளியினுடைய பாகத்தை அடைந்தவ ராகி, வலிமையைப் பெற்ற சமணர்கள் அந்த மருணிக்கியா ருடைய பக்கத்தை அடைந்து அவருக்கு, முக்தியைத் தெரிந்து கொள்ளும் வழி இதுதான்." என்று உண்மையைப் போல தங்களோடு கூட வரும் உணர்ச்சியைக் கொள்ளும். வண்ணம் பல பொய் நூல்களைக் கற்பித்தார்கள். பாடல். வருமாறு:

" பாடலிபுத் திரம் என்னும்

பதிஅணைந்து சமண்பள்ளி மாடணைந்தார் வல்லமணர்

மருங்கணைந்து மற்றவ்ர்க்கு "வீடறியும் நெறி.இதுவே:

எனமெய்போல் தங்களுடன் கூடவரும் உணர்வுகொள

குறிபல்வும் கொளுவினார்.” பாடலிபுத்திரம் என்னும்-அந்த மருணிக்கியார் பாடலி" புத்திரமாகிய திருப்பாதிரிப்புலியூர் என்று கூறப்படும். பதி. - சிவத்தலத்தை. அணைந்து-அடைந்து. சமண்-சமணத் துறவிகள் வாழும் திணை மயக்கம். பள்ளி-ஒரு பள்ளியி னுடைய.. மாடு-பக்கத்தை. அணைந்தார்.அடைந்தவராகி;