பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r. பெரிய புராண விளக்கம்-5

மூளும்மனக் கவலையினால்

முற்றவரும் துயருழந்து.” -

இந்தப் பாடல் குளகம். நாளும்-திலகவதியார் அவ்வாறு ஒவ்வொரு நாளும். மிகும்-மிகுதியாக இருக்கும். பணி-திருப் பணிகளை ஒருமை பன்மை மயக்கம் செய்து-புரிந்து கொண்டு. குறைந்து-தம்முடைய குறைகளை விரட்டானேசு வரரிடம் விண்ணப்பித்து. அடையும்-வரும். நல்-நல்ல. நாளில்-காலத்தில். கேள்-உறவின் முறையாக. உறும்-அமை யும். அன்பு உற-அன்பு உண்டாகுமாறு. ஒழுகும்-நடந்து வரும். கேண்மையினார்-நட்பைப் பெற்ற அந்த மாதரசியார். பின்-தமக்குப் பின்னால். பிறந்தார்-தம்பியாராகப் பிறந்தவ ராகிய மருணிக்கியார். கோள்-கிரகங்களால்; ஒருமை பன்மை மயக்கம். உறு-உண்டாகிய, தீவினை-திய வினையாகிய பாவம். முந்த-எல்லாவற்றிற்கும் முன்னால் செல்ல. ப்:சந்தி. பரசமயம்-சைவ சமயம் அல்லாத வேறு சமயமாகிய சமண சமயத்தை. குறித்ததற்கு-சேர எண்ணி அவ்வாறே சமணர்க ளோடு போய்ச் சேர்ந்து கொண்ட செயலுக்காக. மூளும்முண்டு எழும். மன-தம்முடைய திருவுள்ளத்தில் தோன்றிய. க்:சந்தி. கவலையினால்-கவலையால். முற்றவரும்-முற்றிக் கொண்டு வரும். முற்ற அரும்-காலம் முழுவதும் அருமை யாக இருக்கும் எனலும் ஆம் துயர்-துயரத்தால். உழந்துவருத்தத்தை அடைந்து. - -

பிறகு வரும் 46-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'அவ்வாறு துயர்த்தால் வருத்தத்தை அடைந்தவரும், தூண்டுகின்ற தவத்தைப் புரிந்த விளக்கைப் போன்றவராகிய திலகவதியார் சுடர் வீசும் சோதியாகிய விரட்டானேசு வரரை வணங்கி, அடியேனைத் - தேவரீர் ஆளாகக் கொண்டு திருவருளை வழங்குபவரானால், அடியேனுக்குப் பின்னால் பிறந்தவ்னாகிய மருணிக்கியைத்தொகுதியாகக்கூடி யிருக்கும் தீவினைகளாகிய பாவங்களைப் புரியும் வேறு சமய மாகிய சமண சமயம் என்னும் குழியிலிருந்தும் எடுத்தகுள்