பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 77

மலர், தும்பை மலர், மல்லிகை மலர், முல்லை மலர், இரு வாட்சி மலர், பவளமல்லிகை மலர், வெள்ளைச் செவ்வந்தி மலர், மஞ்சட் செவ்வந்தி மலர் முதலியவை. கொய்து-நந்த வனத்திலிருந்து பறித்து. கொடுவந்து-அவற்றை எடுத்துக் கொண்டு வந்து. மாலைகளும்-அவற்றால் பல மாலைகளை யும். தொடுத்து-கட்டி. அமைத்து-வைத்து. ப்:சந்தி. பலர்அந்தத்திருவதிகையில் வாழும் பலமக்களும். புகழும்-புகழ்ந்து பாராட்டும். பண்பினால்-நல்ல பண்போடு; உருபு மயக்கம். திருப்பணிகள் பல-திருப்பணிகள் பலவற்றை. செய்தார். புரிந்தருளினார். -

அடுத்து உள்ள 45-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

திலகவதியார் அவ்வாறு ஒவ்வொரு நாளும் மிகுதியாக இருக்கும் திருப்பணிகளைப் புரிந்து கொண்டு தம்முடைய குறைகளை வீரட்டானேசுவரரிடம் விண்ணப்பித்து வரும் நல்ல காலத்தில் உறவின் முறையாக அமையும் அன்பு உண் டாகுமாறு நடந்து வரும் நட்பைப் பெற்ற அந்த மாதரசி யார் தமக்கு பின்னால்தம்பியாராகப்பிறந்தவராகிய மருணிக் கியார் கிரகங்களால் உண்டாகிய தீய வினையாகிய பாவம் முன்னால் செல்ல சைவ சமயம் அல்லாத வேறு சமயமாகிய சமண சமயத்தைச் சேர எண்ணி அவ்வாறே சமணர்களோடு போய் சேர்ந்து கொண்ட செயலுக்காக மூண்டு எழும் தம்மு டைய திருவுள்ளத்தில் தோன்றிய கவலையால் முற்றிக் கொண்டு வரும் துயரத்தால் வருத்தத்தை அடைந்து.' பாடல் வருமாறு: . - -

- 'காளும்மிகும் பணிசெய்து .

குறைந்தடையும் கன்னாளில் கேளுறும்அன்புறஒழுகும்

கேண்மையினார் பின்பிறந்தார் கோளுறுதி வினைமுந்தப்.

பரசமயம் குறித்ததற்கு