பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 பெரிய புராண விளக்கம்-6

பெற்று வாய்க்கப் பெற்றுவரும் மந்திர வித்தைகளினால் அந் தச் சூலைநோயைத் தடுக்கவும் அது மேலும் மேலும் மிகுதி யாக வேகத்தை அடைந்து உச்ச நிலையை அடைய வேத னையை உண்டாக்கும் அந்தச் சூலை நோய் ஓங்கி எழுந்து திற்க அந்தப் பாழியில் அந்த மருணிக்கியார்நஞ்சைக் கக்கும் பாம்பினுடைய விஷம் தலையில் ஏறிக் கொண்டது என்று கூறுமாறு மயக்கத்தை அடைந்து துன்பத்தை அடைந்தார்.” பாடல் வருமாறு:

அச்சமயத் திடைத்தாம்முன்

அதிகரித்து வாய்த்துவரும் விச்சைகளால் தடுத்திடவும் மேன்மேலும் மிகமுடுகி உச்சமுற வேதனைநோய்

.ஓங்கிஎழ ஆங்கவர்தாம் நச்சரவின் விடம்தலைக்கொண் டெனமயங்கி நவையுற்றார்.' - அச்சமயத்திடை-அந்தச் சமண சமயத்தில். த்:சந்தி. o "தாம் என்றது மருணிக்கியாரை. முன்-முன்பு. அதிகரித்து-- தலைவராகிய அதிகாரத்தைப் பெற்று. வாய்த்து-வாய்க்கப் பெற்று. வரும்-கை வரும். விச்சைகளால்-மந்திர வித்தைகளி னால் தடுத்திடவும்-அந்த நோயைத் தடுத்துப் பார்த்தும். மேன் மேலும்-அது மேலும் மேலும், மிக-மிகுதியாக முடுகி. வேகத்தை அடைந்து. உச்சம்-உச்ச நிலையை உற-அடைய. வேதனை-வேதனையை உண்டாக்கும். நோய்-அந்தச் சூலை ந்ோய். ஓங்கி எழ-மேலும் மேலும் ஓங்கி எழ. ஆங்கு-அந்தப் பாழியில். அவர்தாம்-அந்த மருணிக்கியார். தாம்:அசை o நிலை: நச்சு-நஞ்சைக் கக்கும். அரவின்-பாம்பினுடைய. விடம்-விஷம். , தலைக் கொண்டு-தலையில் ஏறிக் கொண்டது. வினையாலணையும் பெயர். என-என்று ്പ് x: இடைக்குறை. மயங்கி-மயக்கத்தை அடைந்து. நவை.துன்பத்தை உற்றார்-அடைந்தார். -