பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 87.

தத்தை அடைந்து நடுக்கத்தைப் பெற்று. சமணர்கள் வாழும். பாழியில் உள்ள பாறையில் அவர் விழுந்தார். பாடல். வருமாறு: - - - -

' அடைவில்அமண் புரிதரும

சேனர்.வயிற் றடையும்.அது வடஅனலும் கொடுவிடமும்

வச்சிரமும் பிறவுமாம் கொடியளலாம் ஒன்றாகும்

எனக்குடரின் அகம்குடையப் படருழந்து நடுங்கிஅமண்

பாழியறை யிடைவிழுந்தார்.” - அடைவு-நல்ல அறிவு அடைதல். இல்-இல்லாத; கடைக் குறை.அமண்-சமணர்கள்; திணை மயக்கம்; ஒருமை பன்மை மயக்கம். புரி-விரும்பிய தரும சேனர்-தரும சேனருடைய. வயிற்று-வயிற்றுக்குள். அடையும்-உண்டாகியிருக்கும். அது -அந்தச் சூலை நோய். வட அனலும்-வடவா முகாக்கினியும். வடவாமுகம்-படவாமுகம்; பெண் குதிரையின் முகம். கொடு -கொடுமையாக உள்ள. விடமும்-பாற் கடலில் எழுந்த ஆல. கால நஞ்சும். வச்சிரமும்-இந்திரனுடைய வஜ்ஜிராயுதமும் - பிறவும்-வேறு ஆயுதங்களும். ஆம்-ஆகும். கொடிய-கொடு:

மையாக உள்ள. எலாம்-யாவும்: இடைக்குறை. ஒன்றாகும்: -ஒன்று சேர்ந்ததாகும். என-என்று கூறுமாறு; இடைக் குறை. க்சந்தி.குடரின்-குடலினுடைய. அகம்-உட்புறத்தை. குடைய-குடைந்திருக்க, ப்:சந்தி. படர்-மிக்கதுன்பத்தி: னால்வருத்தத்தை. உழந்து-அடைந்து. நடுங்கி-நடுக்கத்தைப் பெற்று. அமண்-சமணத் துறவியர்கள் வாழும்; திணை. மயக்கம். பாழி-மலைக் குகையில் உள்ள. அறையிடை-பாறை, யில், விழுந்தார்.அந்த மருணிக்கியார் விழுந் தரர்.

பிறகு உள்ள5-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அந்தச் சமண சமயத்தில் தாம் முன்பு அதிகாரத்தைப்.