பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 95

கள் இருக்கின்றனவோ?’ என்று கேட்கவே, அந்தச் சமையற் காரனும் கூறலானான். பாடல் வருமாறு:

ஆங்கவன்போய்த் திருவதிகை

தனைஅடைய அருங்தவத்தார் பூங்கமழ்கங் தனல்னத்தின்

புறம்பணையக் கண்டிறைஞ்சி "ஈங்கியான் உமக்கிளையார்

ஏவலினால் வந்ததெனத் தீங்குளவோ?’ எனவினவ

மற்றவனும் செப்புவான்." ஆங்கு-இவ்வாறு மருனிக்கியார் தம்முடைய தமக்கை யாராகிய திலகவதியார் என்னும் மாதரசியாரை வணங்கி விட்டு. அவன்-அந்தச் சமையற்காரன். போய்-சென்று. த்:சந்தி. திருவதிகை தனை-திருவதிகை விரட்டானத்தை. தன்: அசை நிலை. அடைய..சேர. அரும்-அருமையாக விளங் கும். தவத்தார்-தவத்தைப் புரிந்த தவசியார். பூம்-பலவகை மலர்கள்; ஒருமை பன்மை மயக்கம். கமழ்-நறுமணம் கமழும்: நந்தன வனத்தின்-ஆலயத்தைச் சார்ந்த நந்தனவனத்தில். . அந்த மலர்களாவன: நந்தியாவட்டை மலர், மல்லிகை மலர், முல்லை மலர், இருவாட்சி மலர், பவள மல்லிகை மலர் முதலியவை. புறம்பு-வெளியில் உள்ள இடத்தை. அணைய-போய்ச் சேர. க்:சந்தி. கண்டு அதைப் பார்த்து. இறைஞ்சி-அந்தச் சமையற்காரன் திலகவதியாரை வணங்கி விட்டு. ஈங்கு-இந்தத் திருவதிகை வீரட்டானத்திற்கு இ:குற்றியலிகரம். யான்-அடியேன். உமக்கு-தங்களுக்கு. இளையார்-இளைய சகோதரராகிய தம்பியார் என்னும் மருணிக்கியார். ஏவலினால்-இட்ட கட்டளையால் வந்ததுஇங்கே வந்த காரியம். என-என்று கூற; இடைக்குறை. த்:சந்தி, தீங்கு-துன்பங்கள்; ஒருமை பன்மை மயக்கம். உளவோ-அவனுக்கு இருக்கின்றனவோ இடைக் குறை. என-என்று; இடைக்குறை. வினவ-அந்தச் சமையற் காரனை

o