உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 153, மிதக்கும் நீர் நிரம்பிய குளம் முதலிய நீர் நிலைகளைப் பெற்ற திருவிழிமிழலையில் வீழிநாதரை அந்தத் திருநாவுக் கரசு நாயனார் வாழ்த்தி வணங்கி விட்டுப் பல தினங்கள் அந்தத் திருவிழிமிழலையை விட்டுப் பிரிந்து போகாத நிலை யினால் பல தடவைகளும் அந்த வீழிநாதரைத் தம்முடைய திருக்கரங்களைத் தம்முடைய தலையின்மேல் வைத்துக் கூப்பிக் கும்பிட்டு விட்டு அந்தத் திருவிழிமிழலையில் தங்கி யிருப்பவராகி இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும் முறை. பாக அத்தியயனம் செய்து நிறைவேற்றிய அந்த வேதியர்கள் வாழும் அந்தத் திருத்தலமாகிய திருவிழிமிழலையில் உண்மை. யாகிய அருமையாக இருக்கும் தவத்தைப் புரிந்த அந்தத். திருநாவுக்கரசு நாயனார் ஆகிய சுவாமிகள் தங்கிக் கொண் டிருந்தார். பாடல் வருமாறு : - முன்னாள் அயனும் திருமாலும் முடிவும் முதலும் காணாத பொன்னார் மேனி மணிவெற்பைப் யூர்ே மிழலை யினிற்போற்றிப் பன்னாள் பிரியா நிலைமையினால் பயிலக் கும்பிட் டிருப்பாராய் அங்கான் மறையோர் திருப்பதியில் இருந்தார் மெய்ம்மை அருந்தவர்கள்.” முன்-முன்பு. நாள்-ஒரு காலத்தில். அயனும்-பிரம. தேவனும். திருமாலும்-விஷ்ணு மூர்த்தியும். முடிவும்அன்ன்ப் பறவையினுடைய வடிவத்தை எடுத்துக் கொண்டு மேல்ே பறந்து தேடிப் பார்த்தும். தம்முடைய திருமுடியை பும். முதலும்-பன்றியினுடைய உருவத்தை எடுத்துக் கொண்டு நிலத்தைத் தோண்டித் தேடிப் பார்த்தும் தம்மு டைய திருவடிகளையும். முதல்:எல்லாவற்றிற்கும் மூலமான திருவடிகள்: ஒருமை பன்மை மயக்கம். காணாத பார்க்க. முடியாத. பொன்-தங்கத்தை. ஆர்-போல நிரம்பிய