醬D2 பெரிய புராண விளக்கம்-8 தேம்பொழியும் செந்தமிழ்நாட் டினில் எங்கும் சென்றிறைஞ்சிப் பாம்பணிவார் தமைப்பணிவார் பொன்னிநா டது அணைந்து வாம்புனல் சூழ் வளங்கர்கள் பின்னும் போய் வணங்கியே பூம்புகலூர் வந்தடைந்தார் பொய்ப்பாசம் போக்குவார்.' தேம்-தேனை, மொழியும்-சொரியும் மலர்கள் மலர்ந் திருக்கும் பல வகையாகிய மரங்கள் வளர்ந்து நிற்கும். செந் தமிழ் நாட்டினில்-செந்தமிழ் நாடாகிய பாண்டி நாட்டில் உள்ள எங்கும்-எல்லாச் சிவத்தலங்களுக்கும். சென்றுஅந்தத் திருநாவுக்கரசு நாயனார் எழுந்தருளி. இறைஞ்சிஅந்தச் சிவத்தலங்களில் திருக்கோயில் கொண்டு எழுந் தருளியிருக்கும் சிவபெருமான்களை வணங்கிவிட்டு, ப், சந்தி. பாம்பு-பாம்புகளை ஒருமை பன்மை மயக்கம். அணிவார் தமை-புனைபவர்களாகிய அந்தச் சிவபெருமான்களை. அணிவார்: ஒருமை பன்மை மயக்கம். தமை-இடைக்குறை. தம்: அசைநிலை. ப், சந்தி. பணிவார்-வணங்குவாராகி; முற்றெச்சம், பொன்னி.பொன்னைக் கொழிக்கும் காவிரி யாறு ஒடும். நாடது-சோழ நாட்டை. அது: பகுதிப் பொருள் விகுதி. அணைந்து-அந்த நாயனார் அடைந்து. வாம்-பாயும். .புனல்-நீர் நிரம்பிய குளம், ஏரி, ஆறு, குட்டை, கிணறு, வாவி, பொய்கை முதலிய நீர்நிலைகள் உள்ள ஆகுபெயர். சூழ்-சுற்றியிருக்கும். வள-நீர்வளம், நில வளம், செல்வ வளம், நன்மக்கள் வளம், ஆலய வளம் முதலிய வளங் களைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். நகர்கள்-சிவத் தலங்களுக்கு. பின்னும்-பிறகும். போய்-அந்த நாயனார் எழுந்தருளி வணங்கி-அந்தச் சிவத்தலங்களில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்களைப்பணிந்து விட்டு. ஏ: அசை நிலை. பொய்-பொய்யாக உள்ள ப். சந்தி. பாகம்-பாச பந்தத்தை. போக்குவார்-போக்கியருளுபவ
பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/204
தோற்றம்