திருநாவுக்கரசு நாயனார் புராணம்-3 203 ராகிய அந்தத் திருநாவுக்கரசு நாயனார். பூம்புகலூர்ஆம்புகலூருக்கு வந்து-எழுந்தருளி. அடைந்தார்-சேர்ந்தார். பூம்புகலூர்: இது சோழ நாட்டில் உள்ள சிவத்தலம். இங்கே எழுந்தருளியிருப்பவருடைய திருநாமங்கள் அக்கினிசு வரர், கோணப்பிரான் என்பவை. அம்பிகை கருந்தாழ் குழலி அம்மை. தீர்த்தம் அக்கினி தீர்த்தம். தலவிருட்சம் புன்னை மரம். இது நன்னிலத்திலிருந்து கிழக்குத் திசையில் நான்கு மைல் தூாத்தில் உள்ளது. இது அக்கினி தேவன் வழிபட்ட தலம். தெற்குப் பக்கத்தைத் தவிர மற்றப் பக்கங்கள் எல்லாவற்றிலும் கருங்கல்லினால் அமைத்த அகழி உள்ளது. கோணப்பிரானுடைய திருவுருவம் சற்றுக் கோணியிருக்கிறது. இந்த ஆலயத்தில் சந்திரசேகரருடைய சந்நிதி சிறப்பைப் பெற்றது. அதற்கு நேராக அக்கினி பகவானுடைய தி ரு வு ரு வ ம் உள்ளது. திருநாவுக்கரசு நாயனார் தம்முடைய வாழ்நாள் இறுதியில், எண்ணுர கேன்" எனத் தொடங்கும் ஒரு திருப்பதிகத்தைப் பாடியருளி முத்தி பெற்ற தலம் இது. முன் பிராகாரத்தில் கிழக்குப் பக்கத்தில் வாதாபி கணபதிக்கு அருகில் திருநாவுக்கரசு தாயனாருடைய திருவுருவம் உள்ளது. முன் பிராகாரத்தில் கீழ்ப்பக்கத்தில் அக்கினிசுவரர் சிங்கத்தின் உருவமாகி அப்பரை விழுங்குகிற பாவனையைக் கருங்கல்லில் காட்டப் பட்டிருந்தது. அதை இப்போது செதுக்கி விட்டார்கள். திருப்புகலூர் வர்த்தமானிச்சரம் இந்த ஆலயத்துக்குள்ளே இருக்கிறது. அக்கினிசுவரருக்குப் பல வகையான மலர் மாலைகளைக் கட்டிக் கொடுக்கும் திருத்தொண்டினைப் புரிந்து வந்த முருக நாயனாருடைய திருவவதாரத் தலம் இது. சுந்தரமூர்த்தி நாயனார் துயில் கொள்ளும் போது தம்முடைய தலைக்குக் கீழே உயரமாக வைத்துக் கொண் டிருந்த செங்கற்கள் யாவும் பொன் கற்களாக மாறியிருப் பதைப் பார்த்து, தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினும் சார்வினும்தொண்டர்த் தருகிலாப்
பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/205
தோற்றம்