திருநாவுக்கரசு நாயனார் புராணம்-3 21 z ஒருகால் உமையாளோர் பாக னுமாம் உள்நின்ற நாவுக் குரையா டியாம் கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும் கண்ணாம் கருகாவூர் எந்தை தானே.” அந்த நாயனார் திருவிடைமருதூரைப் பற்றிப் பாடி அருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு: சூலப் படையுடையார் தாமே போலும் - சுடர்த்திங்கட் கண்ணி உடையார் போலும் மாலை மகிழ்ந்தொருபால் வைத்தார் போலும் மந்திரமும் தந்திரமும் ஆனார் போலும் வேலைக் கடனஞ்சம் உண்டார் போலும் மேல்வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும். ஏலக் கமழ்குழலாள் பாகர் போலும் இடைமருது மேவிய ஈச னாரே...' அந்த நாயனார் திருப்பூவணத்தைப் பற்றிப் பாடி கருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு: : " தன்னடியார்க் கருள்புரிந்த தகவு தோன்றும் - சதுர்முகனைத் தலையளித்த தன்மை தோன்றும் மின்னனைய நுண்ணிடையாள் பாகம் தோன்றும் வேழத்தின் உரிவிரும்பிப் போர்த்தல் தோன்றும் துன்னியசெஞ் சடைமேலோர் புனலும் பாம்பும் x தூயமா மதியுடனே வைத்தல் தோன்றும் பொன்னனைய திருமேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.' அந்த நாயனார் திருஆலவாயைப் பற்றிப் பாடியருளிய8 ஒரு திருத்தாண்டகம் வருமாறு: i நீர்த்திரளை நீள்சடைமேல் நிறைவித் தானை நிலமருவி நீரோடக் கண்டான் தன்னைப் பாற்றிரளைப் பயின்றாட வல்லான் தன்னைப் பகைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்தான் - தன்னைக்
பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/217
தோற்றம்