鑽」發 பெரிய புராண விளக்கம்-8 காற்றிரளாய் மேகத்தி னுள்ளே நின்று கடுங்குரலாய் இடிப்பானைக் கண்ணோர் நெற்றித் தீத்திரளைத் தென்கூடல் திருவால வாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே." அந்த நாயனார் திருநள்ளாற்றைப் பற்றிப் பாடி பருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு: " ஆதிக்கண் நான்முகத்தில் ஒன்று சென்று அல்லாத சொல்லுரைக்கத் தன்கை வாளால் சேதித்த திருவடியைச் செல்ல நல்ல சிவலோக நெறிவகுத்துக் காட்டு வானை மாதிமைய மாதொருகூ றாயி னானை மாமவர்மேல் அயனோடு மாலும் காணா நாதியை நம்பியை நள்ளாற் றானை நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே." அந்த நாயனார் திருஆக்கூரைப் பற்றிப் பாடியருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு: . 'முடித்தா மரைஅணிந்த மூர்த்தி போலும் மூவுலகும் தாமாகி நின்றார் போலும் கடித்தா மரைஏய்ந்த கண்ணார் போலும் கல்லலகு பாணி பயின்றார் போலும் கொடித்தா மரைக்காடே நாடும் தொண்டர் குற்றேவல் தாம்மகிழ்ந்த குழகர் போலும் அடித்தா மரைமலர்மேல் வைத்தார் போலும் ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே." அந்த நாயனார் திருநாகைக் காரோணத்தைப் பற்றிப் பாடியருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு: -. ' பாரார் பரவும் பழனத் தானைப் பருப்பதத் தானைப் பைஞ்ஞீலி யானைச் சீரார் செழும்பவளக் குன்றொப் பானைத் திகழும் திருமுடிமேல் திங்கள் சூடிப்
பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/218
தோற்றம்