உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருநாவுக்கரசு நாயனார் புராணம்-3 - 21? பேரா யிரமுடைய பெம்மான் தன்னைப் பிறர்தன்னைக் காட்சிக் கரியான் தன்னைகி. காரார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக் காரோணத் தெஞ்ஞான்றும் காண லாமே.”* அந்த நாயனார் திருமறைக்காட்டைப் பற்றிப் பாடி கருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு: - " துரண்டு சுடரனைய சோதி கண்டாய் தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய் காண்டற் கரிய கடவுள் கண்டாய் கருதுவார்க் காற்ற எளியான் கண்டாய் வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் மெய்ந்நெறி கண்டான் விரதம் எல்லாம் மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய் மறைக்காட் டுறையும் மணாளன் தானே.” f அந்த நாயனார் திருவாரூரைப் பற்றிப் பாடியருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு: - " ஐயன் காண் குமரன்காண் ஆதி யான்காண் அடல்மழுவாள் தானொன்று பியன்மே லேந்து கையான்காண் கடற்பூதப் படையி னான்காண் கண்ணெரியால் ஐங்கணையோன் உடல்காய்ர் - தான்கான் வெய்யன்காண் தண்புனல்சூழ் செஞ்சடையான் காண் வெண்ணிற்றான் காண்விசயற் கருள்செய் - - தான்கான் செய்யன்காண் கரியன்காண் வெளியோன் தான்காண் திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே." அந்த நாயனார் திருஆரூர் அரநெறியைப் பற்றிப் பாடியருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு: ' கற்பகமும் இருசுடரும் ஆயி னானைக் காளத்தி கயிலாய மலையு ளானை