உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256. - பெரிய புராண விளக்கம்-இ ஒருமை பன்மை மயக்கம். ஆண்ட-திருவதிகை வீரட்டானே. கவரர் தடுத்து ஆட்கொண்ட அரசு-அந்தத் திருநாவுக்கரக நாயனார்; திணை மயக்கம். அமர்ந்திருந்தார்.தங்கிக் கொண்டிருந்தார். பிறகு வரும் 428-ஆம் பாடலின் கருத்து வருமாறு: தேவலோகத்தில் வாழும் தேவர்கள் கற்பக மரத்தில் மலர்ந்திருக்கும் மலர்களை மழையைப் போல் இந்த மண்ணு, லகத்தில் நிறையவும், தேவலோகத்திற்கு மேலே நிரம்பிய நாகசுரம், ஒத்து. மத்தளம், கஞ்சதாளம், வீணை என்னும் ஐந்து பெருமையைப் பெற்ற வாத்தியங்கள் எழுப்பிய இனிய கானமும், பிரமதேவன் முதலாக உள்ள யோனிகளாக உள்ளவை யாவும் தங்களுடைய திருவுள் வங்களில் நிரம்பி புள்ள பெரிய மகிழ்ச்சி நிரம்பியிருக்கும் சித்தின்ா மாதத்தில் வரும் சதயமாகும் திருநட்சத்திரத்தில். பாடல் வருமாறு: வானவர்கள் மலர்மாரி மண்ணிறைய விண்ணுலகின் மேனிறைந்த ஐந்துபே ரியஒலியும் விரிஞ்சன் முதல் யோனிகளா யின எல்லாம் உள்நிறைந்த பெருமகிழ்ச்சி தானிறைந்த சித்திரையிற் சதயமாம் திருகாளில்." இந்தப் பாடல் குளகம். வானவர்கள்.தேவலோகத்தில் வாழும் தேவர்கள். மலர்-கற்பக மரத்தில் மலர்ந்திருக்கும். மலர்களை ஒருமை பன்மை மயக்கம். மாரி-மழையைப் போல; உவம ஆகு பெயர். மண்-இந்த மண்ணுலகத்தில், தி ைற ய-நிறையவும். விண்ணுலகின்-தேவலோகத்துக்கு. மேல்-மேலே. நிறைந்த-இனிய நாதம் நிரம்பியுள்ள ஐந்து பேரிய-நாகசுரம், ஒத்து, மத்தளம், கஞ்சதாளம், வீணை என்னும் ஐந்து பெருமையைப் பெற்ற வாத்தியங்கள் ஒருமை. பன்மை மயக்கம். ஒலியும்-எழுப்பிய இனிய கானமும்.