உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருநாவுக்கரசு நாயனார் புராணம்-3 257 விரிஞ்சன்-பிரமதேவன், முதல்-முதலாக உள்ள. யோனி கவராயின-எண்பத்து நான்கு லட்சம் யோனிகளில் பிறந்த உயிர்களான. எல்லாம். யாவும். உள்-தங்களுடைய திருவுள் ளங்களில்; ஒருமை பன்மை மயக்கம். நிறைந்த-நிரம்பியுள்ள. பெருமகிழ்ச்சி-பெரிய ஆனந்தம். தான்: அசைநிலை. நிறைந்த-நிரம்பியிருக்கும். சித்திரையில்-ஒரு சித்திரை மாதத் தில் வரும். சத்யமாம்-சதயமாகும். திருநாளில்-திருநட்சத் திரத்தில். - - அடுத்து வரும் பாசுரம் இந்தத் திருநாவுக்கரசு நாயனார் புராணத்தில் இறுதியாக உள்ளது. அந்தப் பாசுரத்தின் கருத்து வருமாறு: "அடியேன் பேரார்வத்தால் திருவதிகை வீரட்டானேசு வரர் தடுத்து ஆட்கொண்ட திருநாவுக்கரசு நாயனாருடைய வரலாற்றின் முறையை அடியேன் தெரிந்து கொண்ட வண்ணம் பாடினேன். அந்த மேலான முனிவனாகிய திருநாவுக்கரசின் நறுமணம் கமழும் மென்மையான செந்தா மரை மலர்களைப் போன்ற சிவந்து விளங்கும் திருவடிகளை அடியேனுடைய கைகளை அடியேனுடைய தலையின்மேல் குவித்துக் கும்பிட்டுவிட்டு அந்தத் திருநாவுக்கரசு நாய னாரை வணங்கிவிட்டுப் பாண்டிய மன்னனுடைய முதல் அமைச்சராகிய குலச்சிறை தாயனார் இறுதி இல்லாத திருத் தொண்டுகளாகிய இடைவிடாத முயற்சியை இனிமேல் அடியேன் பாடத் தொடங்குகிறேன். பாடல் வருமாறு: அடியனேன் ஆதரவால் ஆண்ட அர சின்சரிதப் படியையான் அறிந்தபடி பகர்ந்தேன்; அப்பரமுனிவன் கடிமலர்மென் சேவடிகள் கைதொழுது குலச்சிறையார் முடிவில் புகழ் திருத்தொண்டின் முயற்சியினை மொழிகின்றேன்."