பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蚤2 பெசிய புராண விளக்கம் 9

பெறல் அரும் - பெறுவதற்கு அருமையாக இருக்கும். புதல்வன் தன்னை-தங்களுடைய புதல்வனாகிய திருநாவுக் கரசை. தள்:அசை நிலை. ப்:சந்திபாயினுள்-ஒருபாய்க்குள். பெய்து - வைத்து. மூடி - ஒரு போர்வையால் மூடிவிட்டு. ப் சந்தி. புறமனை முன்றில் - தங்களுடைய திருமாளிகை யின் வெளியில் உள்ள முற்றத்தினுடைய. முன்றில் - இல் முன்: முன் பின்னாகத் தொக்க தொகை. பாங்கு - பக்கத்தில். ஓர் புடையினில் - ஓர் இடத்தில். மறைத்து வைத்து - திருநாவுக்கரசினுடைய பிணத்தை மறைத்து வைத்துவிட்டு விட்டு. ஏ : அசை நிலை. அற இது - இது முற்றும், தெரியா வண்ணம் தெரிந்து கொள்ளாத வாறு. அமுது செய்விப்போம் - அந்தத் திருநாவுக்க்ரசு தாயனாருக்குத் திருவமுது செய்யச் செய்வோம். என்று - என எண்ணி. விறல் உடை - வீரத்தைப் பெற்ற. த் : சந்தி. தொண்டனார் பால் - திருவதிகை வீரட்டானே சுவரருடைய திருத்தொண்டராகிய திருநாவுக்கரசு நாயனாரிடத்திற்கு. வி ரு ப் .ெ பா டு - விருப்பத்தோடு. விரைந்து - அந்த இரு வ ரு ம் வேகமாக. வந்தார் - வந்தார்கள்: ஒருமை பன்மை மயக்கம். ,

பின்பு வரும் 30 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :

"அந்தத் திருதாவுக்கரசினுடைய அன்னையாரும் தகப்பனாரும் வேகமாக வ்ந்து திருநாவுக்கரசு நாயனார் திருவமுது செய்வதற்கு நேரம் தாமதம் ஆகின்றது என எண்ணி திரு.அமுதும், கறியமுதுகளுமாகிய எல்லா வற்றையும் அழகு பெறுமாறு அட்ைய வைத்து தமக்கு ஒப்பு இல்லாத சீர்த்தியைப் பெற்ற திருவதிகை விரட்டானேசுவரருடைய திருத்தொண்டராகிய திருநாவுக் கரசு நாயனாருக்கு முன்னால் தரையில் விழுந்து வணங்கி விட்டுப் பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு, எம்பெருமானே, தேவரீர் திருவமுது செய்து அடியேங் களுடைய குடும்பம் முழுவதும் உஜ்ஜீவனத்தை அடையும்

- 4 ة .