பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ 88 பெரிய புராண விளக்கம் - "

செவ்விய திருவுள் ளத்தோர்

தடுமாற்றம் சேர கோக்கி, "இவ்வுரை பொறாதென் உள்ளம்,

என்செய்தான் இதற்கொள் றுண்டால்; மெய்விரித் துரையும் என்ன

விளம்புவார் விதிர்ப்புற் றஞ்சி.' அவ்வுரை - அப்பூதியடிகள் நாயனார் திருவாய் மலர்ந். தருளிச் செய்த அந்த வார்த்தைகளை ஒருமை பன்மை, மயக்கம். கேட்ட போதே - அந்தத் திருநாவுக்கரசு, நாயனார் கேட்ட சமயத்திலேயே. அம் - அழகிய. கனர். கண்களைப் பெற்றவராகிய சிவபெருமானார். சுனர்: இடைக்குறை. கண் : ஒருமை ப ன் ைம ம ய க் க ம். அருளால் - வழங்கிய திருவருளால். அன்பர் - திருவதிகை விரட்டானேசுவரருடைய பக்தராகிய அந்தத் திருநாவுக் கரசு நாயனார். செவ்விய - செம்மையாக உள்ள, திருவுள்ளத்து - தம் முடைய தி ரு வு ள்ள தி ல். ஓர் - ஒரு. த டு மா ற் றம் சேர - குழப்பம் உ ண் டா க. நோக்கி . அந்த அப்பூதியடிகள் நாயனாரைப் பார்த்து. இவ்வுரை - நீர் கூறிய இந்த வார்த்தைகளை; ஒருமை பன்மை மயக்கம். என் - அடியேனுடைய. உ ஸ் ள ம் - மனம் பொறாது - சகிக்காது. என் - என்ன. செய்தான் அந்தத் திருநாவுக்கரசு புரிந்தான். இதற்கு - இந்தச் சமயத்திற்கு. ஒன்று - ஏதோ ஒரு செயல். உ. ண் டு - இருக்கிறது. ஆல் : அசை நிலை. மெய் - உண்மையை. விரித்து - விரிவாக எடுத்து. உரையும் . நீர் கூறுவீராக. என்ன - என்று அந்தத் திருநாவுக்கரசு நாயனார் திருவாய்' மலர்ந்தருளிச் செய்ய விதிர்ப்புற்று - அந்த அப்பூதியடிகள் நாயனார் நடுக்கத்தை அடைந்து. அஞ்சி - பயப்பட்டு, விளம்புவார் - பின் வருமாறு திருவாய் மலர்ந்தருளிச் செய்பவர் ஆனார். - -

அடுத்து உள்ள 34 - ஆம் க வி யி ன் உள் ளு ைற வருமாறு : -