பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பூதியடிகள் நாயனார் புராணம் 1 & 9

இந்தப் பெருமையைப் பெற்றவராகிய திருநாவுக் கரசு நாயனார் அடியேனுடைய திருமாளிகையில் திருவமுது புரிந்தருளும் பாக்கியமாகிய இது தவறுமாறு என்ன வருவது?' என அந்த அப்பூதியடிகள் நாயனார் உண்மையை எடுத்துத் திருவாய் மலர்ந்தருளிச் செய்யா விட்டாலும் பெரிய தவத்தைப் புரிந்த தவசிய்ாராகிய அந்தத் திருநாவுக்கரசு நாயனார் கேட்டருள, உண்மையை அந்த நாயனார் அறிந்து கொள்ளுமாறு கூற வேண்டும் என்ற நல்ல பண்பினால் அந்த அப்பூதியடிகள் நாயனார் தம்முடைய திருவுள்ளத்தில் வருத்தத்தை அடைந்து அன்போடு அந்தத் திருநாவுக்கரசு நாயனாரைத் தரையில், விழுந்து பணிந்து விட்டுப் பிறகு தரையிலிருந்து எழுத்து. நின்று கொண்டு தம்முடைய புதல்வராகிய மூத்ததிருதாவுக் கரசுக்கு உண்டான துன்பத்தை எடுத்துத் திருவாய் மலர்ந் தருளிச் செய்தார். பாடல் வருமாறு :

பெரியவர் அமுது செய்யும்

- பேறிது பிழைக்க என்னோ வருவ தென் றுரையா ரேனும் மாதவர் வினவ வாய்மை தெளிவுற உரைக்க வேண்டும்

சீலத்தால் சிங்தை கொந்து பரிவோடு வணங்கி மைக்தர்க்

குற்றது. பகர்ந்தார் அன்றே.' பெரியவர் . அந்தப் பெருமையைப் பெற்றவராகிய திருநாவுக்கரசு நாயனார். அமுது செய்யும் - அடியேனு டைய திருமாளிகையில் திருவமுது புரிந்தருளும். பேறு இது - பாக்கியமாகிய இது. பிழைக்க - தவறுமாறு. என்னோ வருவது - என்ன வருவது. ஒ , அசை நிலை. என்று - என. உரையாரேனும் - அந்த அப்பூதியடிகள் நாயனார் அந்தத் திருநாவுக்கரசு நாயனாருக்கு உண்மையை எடுத்துத் திருவாய் மலர்ந்தருளிச் செய்யாவிட்டாலும். மாதவர் . பெரியதவத்தைப் புரிந்த தவசியாராகிய அத்தத் திருநாவுக்