பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 பெரிய புராண விளக்கம் .9

நாயனாரை தாம் விழையும் சொன்மாலை' என்னும் சொற்றொடர் அமைந்த ஒரு திருப்பதிகத்தை அந்தத் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளி இந்த ஐசுவரி யத்தைப் பெற்றிருக்கும் நல்லவராகிய அந்த அப்பூதியடிகள் நாயனாருடைய வரம்பு இல்லாத பக்தியால் என்றைக்கும் கூறுகின்ற இலாபத்தைப் பெற்றுக் கொண்டவரைப் போலத் திருநாவுக்கரசு நாயனாருடைய திருவடிகளைப் பற்றுக் கோடாக அந்த அப்பூதியடிகள் நாயனார் பற்றிக் கொண்டார். பாடல் வருமாறு :

" அப்பூதி அடிக ளார் தம்

அடிமையைச் சிறப்பித் தான்ற

மெய்ப்பூதி அணிக்தார் தம்மை

விரும்பு,சொன் மாலை வேய்ந்த

இப்பூதி பெற்ற கல்லோர்

எல்லையில் அன்பால் என்றும்

செப்பூதி யங்கைக் கொண்டார் திருகாவுக் கரசர் பாதம்.'

அப்பூதியடிகளார் தம் - அந்தத் திங்களூரில் வாழும் அப்பூதி அடிகள் நாயனாருடைய. தம் : அசைநிலை. அடிமையை - அடிமைத் திறத்தை. ச் : சந்தி. சிறப்பித்து - சிறப்பாக எடுத்து ஒதி. ஆன்ற-அமைந்த, மெய்-தம்முடைய திருமேனி முழுவதும். ப் : சந்தி. பூதி - விபூதியை. அணிந்தார் தம்மை - பூசிக் கொண்டவராகிய அந்த அப்பூதியடிகள் நாயனாரை. தம் : அசை நிலை. விரும்பு - தாம் பாடியருள விழையும். சொன் மாலை வேய்ந்த . சொன்மாலை என்னும் சொற்றொடர் அமைந்த ஒரு திருப்பதிகத்தை அந்தத் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளி. இப்பூதி - இந்த ஐசுவரியத்தை. என்றது திருநாவுக்கரசு நாய னாரை த் தம்முடைய திரு மாளிகையில் அமுது செய்விக்கும் பாக்கியத்தை. பெற்ற - அடைந்த நல்லோர் - நல்லவராகிய அந்த அப்பூதி