பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பூதியடிகள் நாயனார் புராணம் 263

நல்ல தமிழ் மொழியில் அமைந்த திருப்பதிகங்களைப் பாடியருளுபவரானார். பாடல் வரும்ாறு :

மாதவ மறையோர் செல்வ மனையிடை அமுது செய்து காதல்கண் பளித்துப் பன்னாள் கலக்துடன் இருக்த

- பின்றை மேதகு நாவின் மன்னர் விளங்கிய பழன மூதூர் காதர்தம் பாதம் சேர்ந்து கற்றமிழ்ப் பதிகம் செய்வார்.” மா - பெருமையைப் பெற்ற. தவ-தவத்தைப் புரிந்த. மறையோர் . வேதியராகிய அப்பூதியடிகள் நாயனா ருடைய. செல்வ பல வகையான செல்வங்கள் நிரம்பி யிருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். மனையிடை - திருமாளிகையில். அமுது செய்து - திருவமுது செய்து அருளி. காதல் - தம் மனத்தில் உண்டான விருப்பத்தையும். நண்பு . நட்பையும். அளித்து - அவர்களுக்கு வழங்கி. ப் : சந்தி. பன்னாள் - பல நாட்கள். கலந்து உடன் . அவர்களோடு சேர்ந்து. இருந்த . தங்கியிருந்த, பின்றைபின்னர். மே த கு - மே ன் ைம பொருந்தியிருக்கும். நாவின் - நாக்குக்கு. மன்னர் - அரசராகிய திருநாவுக்கரசு நாயனார். விளங்கிய . நிலை பெற்றிருக்கும். பழன மூதூர்- பழமையான ஊராகிய திருப்பழனத்தில். நாதர் தம்- கோயில் கொண்டிருக்கும் ஆபத்சகாயேசுவரருடைய, தம் : அசைநிலை. பாதம் - திருவடிகளை ஒருமை பன்மை மயக்கம். சேர்ந்து . அடைந்து. நல் - நல்ல. தமிழ் . செந்தமிழ் மொழியில் அமைந்த. ப் : சந்தி. பதிகம் . திருப்பதிகங்களை ஒருமை பன்மை மயக்கம். செய்வார். பாடியருளுபவரானார்.

பின்பு வரும் 43 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: "அந்தத் திங்களுரில் வாழும் அப்பூதியடிகன் தாயனாருடைய அடிமைத்திறத்தைச் சிறப்பாக எடுத்து

ஓதி அமைந்த தம்முடைய திருமேனி முழுவதும் விபூதியைப் பூசிக் கொண்டவராகிய அந்த அப்பூதியடிகள்