பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

邀及念 பெரிய புராண விளக்கம் . 8

பிரமசாரிகள் அத்தியயனம் செய்யும் சாம வேதத்தை அவர்களோடு பழகும். பாடல் வருமாறு :

1. கன்மை சாலும்அப் பதியிடை

கறுதுதல் மடவார் - மென் மலர்த்தடம் படியமற் றவருடன் விரன் அன்னம் முன்றுறை ஆடுவடி

பாடுவ சாமம் பன்ம றைக்கிடை யுடன்பயிற்

றுவபல பூவை.'" நன்மை - நன்மைகள்: ஒருமை பன்மை மயக்கம். அவையாவன : நன்மக்கள் வாழ்ந்திருத்தல், சிறந்த திருமாளிகைகளை உடையதாக விளங்குதல், நீர்வளம் அமைதல், நிலவளம் அமைந்திருத்தல், ஆலயங்கள் பல. விளங்குதல், விருந்தினர்களை உபசரித்து இல்லத்தார் விருந்துணவை வழங்குதல் முதலியவை. சாலும் - அமைந் திருக்கும். அப்பதியிடை - அந்தச் சிவத்தலமாகிய சாத்த மங்கையில். நறு - நறுமணம் கமழும். நுதல் - நெற்றி களைப் பெற்ற; ஒருமை பன்மை மயக்கம். மடவார் - மடப்பத்தை உடைய பெண்மணிகள்: ஒருமை பன்மை மயக்கம். மென் - மென்மையாகிய மலர் - செந்தாமரை மலர், வெண்டாமரை மலர், ஆம்பல் மலர், அல்வி மலர், குமுத மலர், நீலோற்பல மலர், செங்குவளை மலர் முதலிய நீர்ப் பூக்கள் மலர்ந்திருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். த் : சந்தி. த ட ம் - த டா க த் தி ல். படிய - படிந்து நீராட மற்று : அசைநிலை. அவருடன் - அந்தப் பெண்மணிகளோடு: ஒருமை பன்மை மயக்கம். விரவி - கலந்து. அன்னம் - அன்னப் பறவைகள்: ஒருமை பன்மை மயக்கம். முன்துறை - நீர் நிலைத் துறைக்கு முன்னால். ஆடுவ-ஆடிக் கொண்டிருப்பவையாக விளங்கும். பல பூவை பல நாகணவாய்ப் புட்கள், மைனாக் குருவிகள்: ஒருமை பன்மை மயக்கம். பல் - பல. மறைக் கிடையுடன் - வேத