பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநீல நக்க நாயனார் புராணம் . *If

பூத்த - மலர்ந்த பங் க ய | த | ம ைர மலரில் ப் : சந்தி. பொருட்டின் மேல் . நடுவில் உன்ன கொட்டையின் மேல். பொரு - ஒன்றனோடு ஒன்று மோதிக் கொள்ளும், கயல் - கயல் மீன்களும்; ஒருமை பன்மை மயக்கம். உகளும் . துள்ளிக் குதிக்கும். காய்த்த செந்நெலின் சம்பா நெற் பயிர்கள் விளைந்த, காடு - வயல்கள் காடுகளைப் போல, ஒருமை பன்மை மயக்கம். குழி - சுற்றியிருக்கும். காவிரி - காவிரியாறு பாயும். தாட்டு - சோழ வள நாட்டில், ச் : சந்தி. சாத்த மங்கை என்று - சாத்த மங்கை என வாய்த்த - வாய்ப்பாக அமைந்த. மங்கல - மங்கலக் காரியங்களைச் செய்யும். அவையாவன: குழந்தை பிறந்த போது புண்யாஹவாசனம் செய்தல், சிறுவர்களுக்கு உபநயனம் செய்வித்தல், கன்னிகைகளுக்குத் திருமண்ம் செய்து வைத்தல், பிரமசாரி களுக்குத் திருமணம் செய்து வைத்துத் தம்முடைய மனைவி மாருடன் இல்லற வாழ்க்கையை நடத்துமாறு புரிதல், சாந்தி முகூர்த்தத்தை தடத்துதல் முதலியன. மறையவர் - வேதியர்கள் வாழும்; ஒருமை பன்மை மயக்கம். முதல் - முதன்மையைப் பெற்ற. பதி - சிவத்தலமாகிய, வனப்பு. அழகு. உலகு - இந்த மண்ணுலகத்தில் வாழும் மக்கள்: இட ஆகு பெயர். எலாம் - எல்லாரும் இடைக் குறை. புகழ்வுறும் - புகழைக் கூறும். தகைத்து - தகுதியை உடையது. ஆல் : அசைநிலை. s

பிறகு வரும் 2 - ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு : ‘நன்மைகள் பல அமைந்திருக்கும் அந்தச் சிவத்த ை மாகிய சாத்த மங்கையில் நறுமணம் கமழும் நெற்றிகளைப் பெற்ற மடப்பத்தைக் கொண்ட பெண்மணிகள் மென்மை யாக உள்ள செந்தாமரை மலர், வெண்டாமரை மலர், ஆம்பல் மலர், அல்லி மலர், குமுத மலர் முதலிய மலர்கள் மலர்ந்திருக்கும் தடாகத்தில் படிந்து நீராட அந்தப் பெண் மணிகளோடு கலந்து அன்னப்பறவை துறைக்கு முன்னான் ஆடும்: நாகணவாய்ப் புட்கள் பல வேத பாட சாலைகளில்