பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநீல நக்க நாயனார் புராணம்

பெரிய புராணத்தில் 5 - ஆவதாக உள்ன திருகின்ற சருக்கத்தில் 6 - ஆவதாக இருப்பது திருநீல நக்க நாயினார் புராணம். அதில் வரும் முதற் பாடலின் உள்ளுறை வருமாறு : %

மலர்ந்த தாமரை மலரின் நடுவில் உள்ள கொட்டை யின் மேல் ஒன்றோடு ஒன்று மோதும் கயல் மீன்கள் துள்ளிக் குதிக்கும் முற்றி விளைந்த சம்பா நெற் பயிர்கள் விளையும் வயல்கள் காடுகளைப் போலச் சுற்றியிருக்கும் காவிரியாறு பாயும் சோழ நாட்டில் சாத்தமங்கை என்று இந்த மண்ணுலகத்தில் வாழும் மக்கள் எல்லாரும் புகழைக் கூறும் தகுதியை உடையது, வாய்ப்பாக அமைந்த மங்கல காரியங்களை ந ட த் து ம் வே தி ய ர் க ள் வாழும் முதன்மையைப் பெற்ற சிவத்தலத்தினுடைய அழகு இந்த மண்ணுலகத்தில் வாழும் மக்கள் புகழைக் கூறும் தகுதியை உடையது. பாடல் வருமாறு :

  • பூத்த பங்கயப் பொருட்டின்மேற்

பொருகயல் உகளும்

காய்த்த செங்கெலின் காடுசூழ் காவிரி காட்டுச் -

சாத்த மங்கைஎன்று லகெலாம்

புகழ்வுறும் தகைத்தால்

வாய்த்த மங்கல மறையவர்

முதற்பதி வனப்பு.'