பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பூதியடிகள் நாயனார் புராணம் 209.

தவிர மற்ற இடங்களில் அந்தச் சிலந்திப் பூச்சியினால் கொப்புளங்களாக இருப்பதைக் காட்டியருளி அந்தப் பெண்மணியாருடைய அன்பை வெளிப்படுத்தி அந்த மாதரசியாரை மீண்டும் திருநீல நக்க நாயனாரோடு, சேர்த்தருளிய தலம் இது. அடிகள் நக்கன் பரவ அயவந்தி அமர்ந்தவனே.", "நிறையினால் நீல நக்கன் நெடுமா நகரென்று தொண்டர், அறையும் ஊர் சாத்தமங்கை' என்று தேவாரத்தில் வருவதைக் காண்க.

இந்தத் தலத்தைப் பற்றிய ஒரு பாசுரம் வருமாறு : . * பொடிதனைப் பூசும் மார்பிற். .

புரிநூலொரு பாற்பொருந்தக் கொடியன சாய வாளா

டுடனாயதும் கூடுவதே கடிமணம் மல்கி நாளும்

கமழும்பொழிற் சாத்தமங்கை அடிகள்நக் கன்பரவ் வயந்தி . அமர்ந்தவனே." - இந்தத் தலத்தைப் பற்றி பஞ்சமப் பண்ணில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு : .

திருமலர்க் கொன்றை மாலை - திளைக்கும் மதிசென்னி வைத்தீர் இருமலர்க் கண்ணி தன்னோ

டுடனாவதும் ஏற்ப தொன்றே பெருமலர்ச் சோலை மேகம்

உரிஞ்சும் பெருஞ்சாத்த மங்கை அருமலர் ஆதி மூர்த்தி

அயவந்தி அமர்ந்த வனே."