பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

名初8 பெரிய புராண விளக்கம் . 9

வாழ்த்தி வணங்கிவிட்டு. க் சந்தி. கான் . தாள்களைப்

பெற்ற: ஒருமை பன்மை மயக்கம். மலர்க்கமல - செந்தாமரை மலர்களும், வெண்டாமரை மலர்களும் மலர்ந்துள்ள ஒருமை பன்மை மயக்கம். வாவி -

வாவியையும். வாவி: வாபீ என்னும் வட சொல்லின் திரிபு. க் : சந்தி. கழனி - வயல்களும்; ஒருமை பன்மை மயக்கம், குழ் சுற்றியிருக்கும். சாத்த மங்கை - சாத்த மங்கை என்னும் சிவத்தலத்தில் வாழும். நான் மறை . இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் ஆகிய நான்கு வேதங்களையும் முறைப்படி அத்தியயனம் செய்து நிறைவேற்றியவராகிய; ஆகு பெயர். நீல நக்கர் - திருநீல நக்க நாயனார். திருத்தொழில் - புரிந்த திருத் தொண்டுகளாகிய வேலைகளை ஒருமை பன்மை மயக்கம். நவிலலுற்றேன் - அ டி யே ன் இ னி மே ல் பாட த் தொடங்கினேன். -

சாத்தமங்கை : இது சோழ நாட்டிலுள்ள சிவத்தலம். இங்கே திருக்கோயில் கொண்டிருப்பவர் அயவந்தீசுவரர். அம்பிமை மலர்க்கண்னம்மை. இந்தச் சிவத்தலத்தில் விளங்கும் திருக்கோயிலுக்கு அயவந்தி என்பது பெயர். இந்தச் சிவத்தலம் திருநள்ளாற்றுக்குத் தென் மேற்குத் திசையில் 5 மைல் தூரத்தில் உள்ளது. இது திருநீலநக்க நாயனாருடைய திருவவதாரத் தலம். அந்த நாயனார் அயவந்தீசுவரரைத் தரிசிப்பதற்காகத் த ம் மு ைட ப பத்தினியாரோடு ஆலயத்துக்குச் சென்ற சமயத்தில் ஒரு சிலந்திப் பூச்சி சிவலிங்கத்தின் மேல் விழ, அந்தத் திருநீல் நக்க நாயனாருடைய தர்ம ப த் தி னி யார் அ ன் பு மிகுதியினால் அந்தப் பூச்சியைத் தம்முடைய திருவாயினால் கதி அகற்ற, அந்தத் திருநீல நக்க நாயனார் தம்முடைய பத்தினியார் அவ்வாறு செய்தது உசிதம்ற்ற செயல் என்று எண்ணி தம்முடைய மனைவியாரை ஒழித்து வைத்து இருக்க, அயவந்தீசுவரர் அந்த நாயனாருடைய கனவில் தோன்றி அவருடைய பத்தினியார் ஊதிய இடத்தைத்