பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2岳盛 பெரிய புராண விளக்கம் - 9

மலையரசனுடைய புதல்வியாகிய பெரிய நாயகியம்மை அழகிய தன்னுடைய கொங்கைகளிலிருந்து ஒரு பொற் கிண்ணத்தில் கறந்து சிவஞானத்தைக் குழைத்து வைத்த பாலை உண்டவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் இரவு நேரத்திலும் தம்முடைய சீர்த்தியைப் பெற்ற திருமாளிகையில் தங்குவதற்கு வேண்டியவற்றை அந்தத் திருநீலநக்க நாயனார் அமைத்து வைத்தார்." பாடல் வருமாறு : -

அமுது செய்தபின் பகலவன்

மேல்கடல் அணையக் குமுத வாவியிற் குளிர்மதிக் கதிரனை போதில் இமய மங்கைதன் திருமுலை

அமுதுண்டார் இரவும் தமது சீர்மனைத் தங்கிட

வேண்டுவ சமைத்தார்.'

அமுது செய்தபின் - அவ்வாறு திருநீலநக்க நாயனா குடைய திருமாளிகையில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் திருவமுது செய்தபிறகு. பகலவன் . பகலைச் செய்யும் சூரியன்: திவாகரன் என்று அவனுக்கு ஒரு பெயர் இருப்பதை அறிக, பகற் செய்யும் செஞ் ஞாயிறும்.’’ என்று வருவதையும் காண்க. மேல் கடல் - மேற்குத் திசையில் உள்ள சமுத்திரத்தை. அணைய - அடைந்து அத்தமனமாக. க் சந்தி, குமுத - குமுத மலர்கள் மலர்ந்திருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். வாவியில் . வாவியில். குளிர் - குளிர்ச்சியைப் பெற்ற. ம தி. சந் தி ர னு ைட ய. க் சந்தி. கதிர் - கிரணங்கள்; ஒருமை பன்மை மயக்கம். அணை - அடையும். போதில் - சமயத்தில். இமயமங்கை தன் - இமய மலையரசனுடைய புதல்வியாகிய பெரிய நாயகி அம்மை: இமயம் : திணை மயக்கம். தன் : அசைநிலை. திரு - அழகிய முலை -