பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநீலநக்க நாயனார் புராணம் 罗岛、

தன்னுடைய கொங்கைகளிலிருந்து ஒரு பொற் கிண்ணத்தில் கறந்து சிவஞானத்தை குழைத்து வைத்த முலை : ஒருமை பன்மை மயக்கம். அமுது - பாலை, உண்டார் - குடித்தருளியவராகிய திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார். இரவும் - இரவு நேரத்திலும். தமது - தம்முடைய. சீர் - சீர்த்தியைப் பெற்ற, மனை - திருமாளிகையில், த் : சந்தி. திங்கிட் - தங்குவதற்காக வேண்டுவ வேண்டியவற்றை. அவையாவன : ஆசனப் பலகை, மெத்தை முதலியவை. அமைத்தார் . அந்தத் திருநீலநக்க நாயனார் அமைத்து வைத்தார். * +

பிறகு உள்ள 29. கவியின் உள்ளுறை வருமாறு : *நல்ல பண்புகளைப் பெற்ற உண்மையான திருத் தொண்டராகிய திருநீலநக்க நாயனாரோடு திருவமுது செய்தருளிவிட்டு இந்த மண்ணுலகத்தில் வாழும் மக்கள் உஜ்ஜீவனத்தை அடையும் வண்ணம் தம்முடைய பத்தினி யாகிய பெரிய நாயகியோடு நம்பராகிய தோனியப்பர் வந்து சேரும் சமயம் முன்னால் அ ந் த ப் பெரி ய நாயகியம்மை தம்முடைய கொங்கைகளிலிருந்து கறந்த பாலை ஒரு பொற் கிண்ணத்தில் வைத்துச் சிவஞான தை அதனோடு குழைத்து வழங்கியருளிய அந்தப் பாலை முன் ஒரு நாளில் பெறுவதற்காக அழுதருளியவராகிய திரு ஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தம்மை அழைத்தருள வேகமாக திருநீலநக்க நாயனார் அந்த திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரிடம் எழுந்தருளி வந்து அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருடைய திருவடிகளைத் தரையில் விழுந்து வணங்கி விட்டுப் பிறகு தரையிலிருந்து எழுந்து அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருக்கு முன்னால் நின்று கொண்டிருந்தார். பாடல் வருமாறு :

சில மெய்த்திருத் தொண்டரோ - டமுதுசெய் தருளி

ஞாலம் உய்ர்திட காயகி

யுடன்கம்பர் கண்ணும்