பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமிநந்தியடிகள் நாயனார் புராணம் 279

அணைந்து . அந்த வன்மீக நாதரை அடைந்து. தாழ்ந்துதரையில் விழுந்து அந்த நாதரை. பணிந்து-பணிந்து விட்டு. வாழ்ந்து - பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு மகிழ்ச்சியை அடைந்து. போந்து - மேலே எழுந்தருளிச் சென்று. அம் - அழகிய. பொற் . தங்கத்தைப் பதித் திருக்கும். புரிசை - திருமதிலினுடைய. த் சந்தி. திரு - அழகிய. முன்றில் - முற்றத்தை. முன்றில் - இல்முன்: முன்பின்னாகத் தொக்க தொகை. அணைவார் - அந்த நாயனார் அடைவாராகி; முற்றெச்சம். பாங்கு - பக்கத்தில் உள்ள. ஓர் - ஒப்பற்ற, அரனெறியின் - திருவாரூர் அரநெறியில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும். நம்பர்க்கு - தம்முடைய அடியவர் களுக்குப் பல வகையபன நம்பிக்கையை உண்டாக்கு பவராகிய அகிலேசுவரருக்கு. அந்த நம்பிக்கைகள் இன்ன என்பதை வேறோர் இடத்தில் கூறினோம்; ஆண்டுக் கண்டுணர்க. இடமாம். எழுந்தருளியிருக்கும் இடமாகும். கோயிலினுள் - தி ரு க் கே யி லு க் கு உள்ளே. புக்கு . நுழைந்து. வணங்க . அந்த அகிலேசுவரரைப் பணியும் பொருட்டு. நண்ணினார் . திருக்கோயிலுக்குள் எழுந் தருளிச் சென்றார். -

திருவாரூர் அரனெறி : இது சோழ நாட்டில் திரு வாரூரில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பு வருடைய தி ரு நா ம ங் க ள் அகிலேசுவரர், அப்பு நெய்யானவர், அரனெறியப்பர் என்பவை. அம்பிகையின் திருநாமங்கள் புவனேசுவரி, வண்டார் குழவி என்பவை. இந்தச் சந்நிதி திருவாரூரில் திருமூலட்டானம் என்று உள்ள பெரிய திருக்கோயிலில் இரண்டாம் பிராகாரத்தில் மேற்குத் திசையில் உள்ளது. ந மி ந ந் தி ய டி க ள் நாயனார் தண்ணிரால் திருவிளக்கை ஏற்றி வைத்த சிலத்தலம் இது. அந்த நமிநந்தியடிகள் நாய னா ைர ச் சிறப்பித்துத் திருநாவுக்கரசு நாயனார் திருவாரூர் அரநெறியைப் பற்றிய ஒரு திருத்தாண்டகத்தில் பாடியருளியுள்ளார். அந்தத் திருத்தாண்டகம் வருமாறு : . . . . . . . . .