பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 o பெரிய புராண விளக்கம் . 9

போன்ற பாம்புப் புற்றில் எழுந்தருளியிருக்கும் மாணிக்கம் வீசும் செழுமையான சோதியைப் போன்றவராகிய வன்மீக நாதரை நேராகத் தரிசித்து வணங்கும் நல்ல குணத்தை அந்த நாயனார் தம்முடைய பற்றுக்கோடாக எண்ணி அந்த வன்மீக நாதரை அடைந்து தரையில் விழுந்து அந்த நாதரைப்ப ணிந்து விட்டுப் பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு மகிழ்ச்சியை அடைந்து மேலே எழுந்தருளிச் சென்று அழகிய தங்கத்தைப் பதித்திருக்கும் திருமதிலினுடைய அழகிய முற்றத்தை அந்த நாயனார் அடைவாராகி பக்கத்தில் உள்ள ஒப்பற்ற திருவாரூர் அருனெறியில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் தம்பராகிய அகிலேசுவரருக்கு வாழும் இடமாகும் திருக்கோயிலுக்குள் து ைழ ந் து அ ந் த அகிலேசு வரரைப் பணியும் பொருட்டு எழுந்தருளிச் சென்றார்.' பாடல் வருமாறு : .

', செம்பொற் புற்றின் மாணிக்கச்

செழுஞ்சோ தியைகேர் தொழும்.சிலம் தம்பற் றாக கினைந்தணைந்து

தாழ்ந்து பணிந்து வாழ்ந்துபோக் தம்பொற் புரிசைத் திருமுன்றில்

அணைவார் பாங்கோர் அரனெறியின் கம்பர்க் கிடமாம் கோயிலினுட் .

புக்கு வணங்க கண்ணினார்."

செம் . அந்த நமிநந்தியடிகள் நாயனார் திருவாரூரில் விளங்கும் ஆலயத்தில் உள்ள சிவப்பாக ஒளிரும். பொன் . தங்கத்தைப் போன்ற உமவ ஆகு பெயர். புற்றில் - பாம்புப் புற்றில் எழுந்தருளியிருக்கும். மாணிக்கச் செழும் சோதியை - மாணிக்கம் வீசும் செழுமையான சோதியைப் போன்றவராகிய வன்மீக நாதரை: உவம ஆகு பெயர். நேர் - நேராக. தொழும் - தரிசித்து வணங்கும். சீலம் - நல்ல குணத்தை, தம் - அந்த நாயனார் தம்முடைய. பற்றாக - பற்றுக்கோடாக. நி ைன ந் து - எண்ணி.