பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமிநந்தியடிகள் நாயனார் புராணம் - 377

தெவ்வூர் எரித்த வரைச்சிலையார்

திருப்பா தங்கள் வணங்கினார்.'

அவ்வூர் நின்றும் . அந்த நமிநந்தியடிகள் நாயனார் அந்த ஏ ம ப் பேறு ரி லி ரு ந் து ம். திருவாரூரதனை - திருவாரூருக்கு உருபு மயக்கம். அது : பகுதிப் பொருள் விகுதி. அடைவார் - எழுந்தருள்பவராகி; முற்றெச்சம் அடியார் மேல் - தம்முடைய அடியவர்களிடம்: ஒருமை பன்மை மயக்கம். வெவ்வூறு - வரும் கொடிய துன்பம் களை. ஊறு: ஒருமை பன்மை மயக்கம். அகற்றும் - போக்கியருளும். பெருமான் தன் . சிவபெருமானாராகிய தியாகராஜருடைய, ஒருமை பன்மை மயக்கம். தன் : அசை நிலை. விரை சூழ் - நறுமணம் சுற்றிக் கமழும். மலர்த்தாள் . செந்தாமரை மலர்களைப் போன்ற திருவடி களை. மலர் : ஒருமை பன்மை மயக்கம். தாள் : ஒருமை பன்மை ம ய க் கம். பனி வு று த ல் - வணங்குதல். எவ்வூதியமும் - எந்த விதமான இலாபமும் ஆகும். என - என்று இடைக்குறை. க் சந்தி, கொள்ளும் எண்ணம் - எண்ணத்தை. உடையார் - பெற்றவராகிய அந்த நமிநந்தி அடிகள் நாயனார். பல நாளும் . பல தினங்களும். தாளும்: ஒருமை பன்மை மயக்கம், தெவ் - பகைவர் களாகிய தாரகாட்சன், வித்யுன்மாலி, வாணன் என்னும் மூன்று அசுரர்களுடைய, ஒருமை பன்மை மயக்கம். ஊர்பறக்கும் கோட்டைகளாகிய மூன்று புரங்களையும்: ஒருமை பன்மை ம யக் கம். எ கி த் த - எரித்தருளிய. வரை - மேருமலையாகிய, ச் : சந்தி. சிலையார் - வில்லை ஏ ந் தி ய வ ரா கி ய அந்தத் தியாகராஜப் பெருமானாருடைய. திரு - அழகிய, ப் : சந்தி. பாதங்கள் - திருவடிகளை. வணங்கினார் . அந்த நாயனார் பணிந்தார்.

பிறகு வரும் 7 - ஆம் பாடலின் கருத்து வருமாறு :

அந்த நமிநந்தியடிகள் நாயனார் திருவாரூரில் விளங்கும் ஆலயத்தில் உள்ள சிவப்பாக ஒளிரும் தங்கத்தைப் பெ. புரா , 9 - 18 х -