பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

z76 பெரிய புராண விளக்கம் . 9

பாமங்களைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். இரவும் . இராத்திரி நேரத்திலும். பகலும் . பகல் நேரத்திலும். உணர்வு - உணர்தல். ஒழியா - நீங்காத. இன்பம் . ஆனந்தத்தை. எய்தினார் . அந்த நாயனார் அடைந்தார்.

சாம கண்டர்: 'சாம வேதமோர் கீதம் ஒதி.", சோமமும் ஓதுவதுடையார். , சாம நல் வேதனும்,' என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும். பாடினார் சாமவேதம்.’’ என்று திருநாவுக்கரசு நாயனாரும், சாம வேதனைத் தன் ஒப்பிலானை' என்று சுந்தர மூர்த்தி தாயனாரும் பாடியருளியவற்றைக் காண்க.

பிறகு உள்ள 6 - ஆம் கவியின் உள்ளுறை வரும்ாறு :

அந்த நமிநந்தி அடிகள் நாயனார் அந்த ஏமப்பேறுாரி லிருந்தும் திருவாரூருக்கு எழுந்தருள்பவராகி, தம்முடைய அடியவர்கள்பால் வரும் கொடிய துன்பங்களைப் போக்கி யருளும் பெருமானாராகிய தியாகராஜருடைய நறுமணம் : சுற்றிக் கமழும் செந்தாமரை மலர்களைப் போன்ற திருவடி களை வணங்குதல் எந்த வகையான இலாபமும் ஆகும் என்று நினைத்துக் கொள்ளும் எண்ணத்தைப் பெற்ற வராகிய அந்த நமிநந்தியடிகள் நாயனார் பல தினங்களும் தம்முடைய பகைவர்களாகிய தாரகாட்சன், வித்யுன்மாலி, வாணன் என்றும் மூன்று அசுரர்களுக்கு உரிய பறக்கும் கோட்டைகளாகிய மூன்று புரங்களை எரித்த மேருமலை பாகிய வில்லை ஏந்தியவராகிய அந்தத் தியாகராஜப் பெருமானாருடைய அழகிய திருவடிகளை அந்த நாயனார் பணிந்தார். பாடல் வருமாறு : -

அவ்வூர் கின்றும் திருவாரு

ரதனை அடைவார் அடியார்மேல் வெவ்வூ றகற்றும் பெருமான்தன்

விரைசூழ் மலர்த்தாள் பணிவுறுதல் எஸ்ஆ தியமும் எனக்கொள்ளும் r. விண்ணம் உடையார் பலகாரும்