பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிநந்தியடிகள் நாயனார் புராணம் - 塑?等

  • வாய்மை மறைநூல் சீலத்தால்

வளர்க்கும் செக்தி எனத்தருவார்:

தூய்மைத் திருநீற் றடைவேமெய்ப்

பொருளென் றறியும் துணிவினார்;

சாமகண்டர் செய்யகழல்

வழிபட் டொழுகும் தலைமைகிலை

யாம இரவும் பகலும்உணர்

வொழியா இன்பம் எய்தினார்.'

வாய்மை - அந்த நமிநந்தியடிகள் நாயனார் உண்மை களை எடுத்துக் கூறும். வாய்மை: ஒருமை பன்மை மயக்கம். நமிநந்தியடிகள் நாய னார்: தோன்றா எழுவாய். மறை - இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங் களாகிய, ஒருமை பன்மை மயக்கம். நூல் . சாத்திரங்கள் விதிக்கும்; ஒருமை பன்மை மயக்கம்; உருபு மயக்கம். சீலத் தால்-நல்ல பண்புகளோடு; ஒருமை பன்மை மயக்கம்; உருபு மயக்கம். வளர்க்கும் - தாம் ஒவ்வொரு நாளும் இரண்டு வேளைகளிலும் ஒளபாசனம் செய்யும் போது வளர்க்கும், செம்-சிவப்பாகத் தோன்றும். தீ-நெருப்பு. எனத் தருவார். என்று கூறும் தகுதியைப் பெற்றவர். என : இடைக்குறை. தூய்மை - பரிசுத்தமாகிய, தி ரு நீ ற் று - விபூதியை. அடைவே . பூசிக் கொள்ளும் சம்பந்தமே. மெய் - உண்மை யான. ப்:சந்தி. பொருள் என்று - செயல் என அறியும் . தெரிந்து கொண்டிருக்கும். துணிவினார் . உறுதியைத் தம்முடைய திருவுள்ளத்தில் கொண்டவர். சாமி - சாம வேதத்தைக் கானம் செய்தருளும். கண்டர் - திருக் கழுத்தைப் பெற்றவராகிய சிவபெருமானாருடைய. செய்ய செந்தாமரை மலர்களைப் போலச் சிவந்த. கழல் - வெற்றிக் கழலைப் பூண்டு கொண்டு விளங்கும் திருவடிகளை; ஆகுபெயர். வழிபட்டு - வழிபாடு புரிந்து. ஒழுகும் - தம்முடைய வாழ்க்கையை நடத்தும். தலைமை - தலைமையாகிய, நிலை - நிலையி லி குந் து. யாம -