பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蠢*臺 - பெரிய புராண விளக்கம் .9

தம் : அசை நிலை. ஒங்கு - புகழ் ஓங்கி வளரும். குலத்தினுள் . குடும்பத்தில். சாதியில் எனலும் ஆம். வந்தார் - திருவவதாரம் செய்தருளியவர். இருமை . இம்மை உலகாகிய இந்தப் பூவுலகத்திலும், மறுமை உலகாகிய ேத வ .ே ல ள க த் தி லு ம். ஈசர் - பரமேசு வரருடைய. கழல் வெற்றிக் கழலைப் பூண்டு கொண்டு விளங்கும். திருவடிகளை ஆகுபெயர். இறைஞ்சி - வணங்கி. ஏத்தப் பெற்ற - துதிக்கும் பாக்கியத்தைப் பெற்ற. தவத்து - தாம் புரிந்த தவத்தினால். அருமை - அருமையாக உள்ள செயல்களை; ஆகுபெயர். புரிவார் - செய்பவர். நமிநந்தி அ டி. க ள் - ந மி ந ந் தி அடிகள் நாயனார். என்பார் - என்னும் திருநாமத்தைப் பெற்றவர். ஆயினார் - ஆனார். . . . . . . .

அடுத்து உள்ள 5 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :

அந்த நமிநந்தி அடிகள் நாயனார் உண்மைகளை எடுத்துச் சொல்லும் இருக்கு வேதம், யஜுர், வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களாகிய சாத்திரங்கள் கூறும் நல்ல பண்புகளோடு தாம் ஒளபாசனம் செய்யும் போது வார்க்கும் சிவந்த நெருப்பு என்று கூறும் தகுதியைப் பெற்றவர், பரிசுத்தமான விபூதியினுடைய சம்பந்தமே உண்மையான பொருள் எனத் தெரிந்து கொண்டிருக்கும் உறுதியைத் திருவுள்ளத்தில் கொண்டவர், சாம வேதத்தைக் கானம் செய்தருளும் கழுத்தைப் பெற்ற வராகிய சிவபெருமானாருடைய செந்தாமரை மலர். களைப் போலச் சிவந்து விளங்குபவையும், வெற்றிக் கழலைப் பூண்டு கொண்டு பொலிபவையும் ஆகிய திருவடி களை வழிபாடு செய்து தம்முடைய வாழ்க்கையை நடத்திக் 'கொண்டு வரும் தலைமையாகிய நிலையிலிருந்து யாமங் களைப் பெற்ற இரவு நேரத்திலும் பகல் நேரத்திலும்

உணர்தல் நீங்காத ஆனந்தத்தை அந்த நாயனார் . அடைந்தார். பாடல் வருமாறு : .