பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிநந்தியடிகள் நாயனார் புராணம் 27s.

தடுநடுவில். ஏ : அ சை நிலை. வளர்த்த - அத்து. வேதியர்கள் யாககுண்டத்தில் வளர்த்த. செம் - சிவப்பாக. விளங்கும். தி - நெருப்பை மானும் - ஒத்து விளங்கும், ஆல் : சற்றசை நிலை. . -

பிறகு உள்ள 4 - ஆம் கவியின் கருத்து வருமாறு :

பெருமையோடு திகழும் அந்தச் சிவத்தலமாகிய ஏமப். பேறுாரில் விரும்பிப் பாதுகாக்கும் விபூதியைப் பூசிக் கொள்ளும் சைவ சமய வழியில் ஒருமைப்பாட்டைப் பெற்ற. வழியில் வாழும் வேதியர்களுடைய புகழ் ஓங்கி வளரும் குடும்பத்தில் திருவவதாரம் செய்தருளியவர் இம்மை மறுமை ஆகிய இரண்டு உலகங்களிலும் பரமேசுவரருடைய வெற்றிக் கழலைப் பூண்டு கொண்டு விளங்கும் திருவடி களை வணங்கித் துதிக்கும் பாக்கியத்தைப் பெற்ற தவத். தினால் அருமையாக உள்ள செய்கைகளைப் புரிபவர் தமிநந்தியடிகள் நாயனார் என்னும் திருநாமத்தை, உடையவர் ஆனார். பாடல் வருமாறு :

பெருமை விளங்கும் அப்பதியிற் பேணும் ற்ேறுச் சைவநெறி ஒருமை கெறிவாழ் அந்தணர்தம்

ஓங்கு குலத்தி னுள்வந்தார் இருமை உலகும் ஈசர்கழல்

இறைஞ்சி ஏத்தப் பெற்றதவத் தருமை புரிவார் கமிகக்தி _ - அடிகள் என்பார் ஆயினார்."

. பெருமை - பெருமையோடு. விளங்கும் . திகழும்.

அப்பதியில் - அந்தச் சிவத்தலமாகிய ஏமப்பேறுரில். பேணும் - விரும்பிப் பாதுகாக்கும். நீற்று விபூதியைப் பூசிக் கொள்ளும், ச் : சந்தி, சைவ நெறி - சைவ சமய வழி யில், ஒருமை-ஒருமைப்பாட்டைப் பெற்ற, நெறி - வழியில். வாழ் . தங்களுடைய வாழ்க்கையை நடத்தும். அந்தணர் தம் . வேதியர்களினுடைய ஒருமை பன்மை மயக்கம்.