பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岛?2 பெரிய புராண விளக்கம் - 8

பெற்றவர்களாகிய வேதியர்கள் புரியும் யாகசாவையில் அலங்காரம் செய்த யாககுண்டத்தின் மேல் மணலைப் பரப்பிய வெண்மையான பரப்புக்கு நடு நடுவில் அந்த வேதியர்கள் யாசுகுண்டத்தில் வளர்த்த சிவந்த நெருப்பை ஒத்து விளங்கும். பாடல் வருமாறு :

  • பணையில் விளைந்த வெண்னெல்லின்

பரப்பின் மீது படர்செய்ய

துணர்மென் கமலம் இடைஇடையே

சுடர்விட் டெழுந்து தோன்றுவன

புணர்வெண் புரிநூ லவர்வேள்விக்

களத்தில் புனைந்த வேதிகைமேல்

மணல்வெண் பரப்பின் இடைஇடையே

வளர்த்த செக்தி மானுமால்."

பணையில் - அந்த ஏமப்பேறுாரில் உள்ள வயல்களில்: ஒருமை பன்மை மயக்கம். விளைந்த - விளைந்து நிற்கிற. வெண்ணெல்லின் - கு று ைவ நெற்வயில்களினுடைய: ஒருமை பன்மை மயக்கம், பரப்பின் மீது - விரிவான இடத்திற்கு மேல். படர் - படரும், செய்ய - சிவந்த, துணர் - பூங்கொத்துக்களைப் பெற்ற; ஒருமை பன்மை மயக்கம். மென் - மென்மையான. கமலம் - செந்தாமரை மலர்கள்; ஒருமை பன்மை மயக்கம். இடை இடை - நடு நடுவில். ஏ : அசை நிலை. சுடர்விட்டு - ஒளியை வெளி விட்டு. எழுந்து தோன்றுவன - எழுந்து தோன்றுபவை. புணர்.தங்களுடைய மார்புகளில் அணிந்திருக்கும். வெண் - வெண்மையாகிய, புரி - புரிகள் அடங்கிய; ஒருமை பன்மை மயக்கம். நூலவர் - பூணுரலைப் பெற்றவர் களாகிய வேதியர்கள்; ஒருமை பன்மை மயக்கம். வேள்விக்களத்தில் - தாங்கள் புரியும் யாகசாலையில். புனைந்த - அலங்காரம் செய்த வேதிகை மேல் - யாக குண்டத்தின்மேல். மணல் வெண் . மணலைப் பரப்பிய வெண்மையான. பரப்பின் - பரப்புக்கு, இடை இடை