பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமிநந்தியடிகள் நாயனார் புராணம் 27:

தோரணங்கள் - மாவிலைகளையும் தென்னங்குருத்துக் களையும் மலர்களையும் கட்டிய தோரணங்கள். மருங்கு - பக்கங்களில்; ஒருமை பன்மை மயக்கம். பயிலும் . தொங்கி விளங்கும். மணி - அழகிய மறுகு - திருவீதிகள் இருக்கும்; ஒரு ைம ப ன் ைம மயக்கம். வேலை - சமுத்திரத்தில். பயிலும் . நிரம்பியிருக்கும். புனல் - நீரை. பருகு - குடிக்கும். மேகம் - மேகங்கள்: ஒருமை பன்மை மயக்கம். பயிலும் - தவழும். மாடங்கள் - பல மாடங்கள் அந்த ஊரில் உயரமாக நிற்கும். சோலை . பூம்பொழில்களில்; ஒருமை பன்மை மயக்கம். பயிலும் - அடர்த்தியான மரங்கள் வளர்ந்து நிற்பதால் உண்டான. குளிர்ந்த குளிர்ச்சியை அடைந்த, இருள் . இருட்டு நிரம்பி. யிருக்கும். சுரும்பு - வண்டுகள்: ஒருமை பன்மை மயக்கம். பயிலும் அரும்பூகம் - அருமையாக வளர்ந்து நிற்கும் கமுக மரங்களில்; ஒருமை பன்மை மயக்கம். பயிலும் - மொய்த்துக் .ெ க | ண் டு f ங் க | ர ம் .ெ ச ய் யு ம். காலை - காலை நேரத்தில். பயிலும்.செய்யும். வேதஒலி - பிரமசாரிகள் அத் தி ய ய ன ம் செய்து பழகும் இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வன வேதம் என்னும் நான்கு வேதங்களின் இனிய கானம் கேட்கும். வேத : ஒருமை பன்மை மயக்கம். செழு - செழிப்பை உடைய. நீர் . நீர் பாயும், ச் : சந்தி. செய் - வயல்களில்; ஒருமை பன்மை மயக்கம். கழுநீர் - செங் கழுநீர் மலர்கள்: ஒருமை பன்மை மயக்கம். பயிலும் . மிகுதியாக மலர்ந்து விளங்கும்.

பிறகு வரும் 3 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :

அந்த ஏமப்பேறுாரில் உள்ள வயல்களில் விளைந்து நிற்கும் குறுவை நெற்பயிர்களினுடைய விரிவான இடத்தின் மேல் படரும் சிவந்த தளிர்களைப் பெற்ற மென்மையான செந்தாமரை மலர்கள் நடுநடுவில் ஒளியை வெளிவிட்டு எழுந்து தோன்றுபவை தங்களுடைய மார்புகளில் அணித் திருக்கும் வெண்மையாகிய புரிகள் அடங்கிய பூணுரலைப்