பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 70 பெரிய புராண விளக்கம் - 9

பெருமை - பெருமையானது. எண் திசையும் . கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு என்னும் எட்டுத் திசை களிலும். திசை : ஒருமை பன்மை மயக்கம். ஏற் - ஏறிய. ஊர் - சிவத்தலம். ஏமப்பேறுார் - ஏமப்பேறுார் என்னும் ஊர் ஆகும். ஆல் சற்றசை நிலை -

பிறகு உள்ள 2. ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :

அந்த ஏமப்பேறுாரில் மலர் மாலைகளைத் தொங்க விட்டிருக்கும் தோரணங்கள் பக்கங்களில் தொங்கி விளங்கும் அழகிய திருவீதிகள் இருக்கும்; சமுத்திரத்தில் நிரம்பி யிருக்கும் நீரைக் குடிக்கும் மேகங்கள் தவழும் மாடங்கள் அந்த ஊரில் உயரமாக நிற்கும்; சோலைகளில் அடர்த்தி பான மரங்கள் இருப்பதால் உண்டான குளிர்ச்சியை அடைந்த இருட்டு நிரம்பியிருக்கும்; வண்டுகள் அருமையாக வளர்ந்து நிற்கும் கமுக மரங்களில் மொய்த்துக் கொண்டு நீங்காரம் செய்யும்; காலை நேரத்தில் பிரமசாரிகள் அத்தியயனம் செய்து பழகும் இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களின் இனிய கானம் கேட்கும்; செழிப்பான நீர் பாயும் வயல்களில் செங்கழுநீர் மலர்கள் மிகுதியாக மலர்ந்து விளங்கும். பாடல் வருமாறு : -

மாலை பயிலும் தோரணங்கள்

மருங்கு பயிலும் மணிமறுகு: வேலை பயிலும் புனல்பருகு

மேகம் பயிலும் மாடங்கள்; சோலை பயிலும் குளிர்ந்தஇருள் கரும்பு பயிலும் அரும்பூகம்: காலை பயிலும் வேதஒலி,

கழுநீர் பயிலும் செழுகிர்ச்செய்.' மாலை - அந்த ஏமப்பேறுாரில் மலர் மாலைகளை: ஒருமை பன்மை மயக்கம். பயிலும் - தொங்க விட்டிருக்கும்.